கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 நவம்பர், 2012

மொழிபெயர்ப்பு கவிதை அமெரிக்கக் கவிஞன் லாங்க்ஸ்டன் ஹுஹ்ஸ்

என் தளம் வாசிக்கும் தெரிந்த மற்றும் முகம் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் .

மலைகள்.காம்  என்ற இணைய இதழில் இந்த மொழிபெயர்ப்பு கவிதைகள் இடம் பெற்றன. லாங்க்ஸ்டன் ஹுயூஸ் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர்.
இந்த கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.




Acceptance
God in His infinite wisdom
Did not make me very wise-
So when my actions are stupid
They hardly take God by surprise

அங்கீகாரம்

கடவுள் தன்னுடைய அளவில்லா ஞானத்தில்
என்னை கூர்மையான அறிவுடன் உருவாக்கவில்லை
அதனால் என்னுடைய செயல்கள் மடத்தனமாக இருக்கும் சமயம்
அவைகள் கடவுளால் ஆச்சிரியமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

Dreams

Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.
Hold fast to dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow.

கனவுகள்

கனவுகளை வேகமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் கனவுகள் இறந்தால்
வாழ்க்கை பறக்க முடியாத
சிறகிறந்த பறவையாகிறது.
கனவுகளை வேகமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் கனவுகள் போய்விடும் சமயம்
வாழ்க்கை உறைந்த பனியினாலான
ஒரு தரிசு நிலமாகிறது.

Ennui

It’s such a
Bore
Being always
Poor.

சலிப்பு

அது அத்தகைய ஒரு
களைப்பானது
என்றென்றும் ஏழையாகவே
இருப்பது.

Oppression

Now dreams
Are not available
To the dreamers,
Nor songs
To the singers.
In some lands
Dark night
And cold steel
Prevail
But the dream
Will come back,
And the song
Break
Its jail.

அடக்குமுறை

இப்போது கனவுகள்
கிடைப்பதில்லை
கனவு காண்பவர்களுக்கு,
பாடல்கள் பாடகர்களுக்கு.
சில நிலங்களில்
கருமையான இரவும்
குளிர்ந்த இரும்பும்
இருக்கின்றன
ஆனால் அந்த கனவு
மீண்டும் வரும்
மேலும் அந்த பாடல்
உடைக்கும்
அதனுடைய சிறையை.

Peace

We passed their graves:
The dead men there,
Winners or losers,
Did not care.
In the dark
They could not see
Who had gained
The victory.

அமைதி

நாங்கள் அவர்களுடைய கல்லறைகளை கடந்தோம்
இறந்த மனிதர்கள் அங்கே,
வென்றவர்கள் அல்லது தோற்றவர்கள்,
கவனிக்க வேண்டாம்.
அந்த இருட்டில்
அவர்களால் பார்க்க முடியாது
வெற்றியை
வென்றெடுத்தவர்களை.
•••

செவ்வாய், 30 அக்டோபர், 2012

முடிவு

 பயணத் தொடக்கம்
எல்லையற்ற வாசல்கள்
நுழைந்த ஒன்றில் பயணம்
மீண்டும் வாசல்கள் ..
நுழையும் வாசல் .
யாரோ சொல்ல
மலர்ந்த ஆசைகள்
துளிர்விட்ட  எண்ணங்கள்
மொட்டாகி உதிர்ந்த  நம்பிக்கைகள்
தோளோடு பயணித்த நட்புகள்
தோன்றி மறைந்து
தோன்றிய உறவுகள்
பாதையில் சுமைகள்
கடக்க கடக்க
ஒரு வழிப் பாதை
என் ஆசை
பாசம்
கோபம்
படிப்பு
பயம்
பெயர்
புகழ்
பணம்
உழைப்பு
நினைவுகள்
சிந்தனைகள்
கற்பனைகள்
எழுத்துக்கள்
உறவுகள்
நட்புகள்
சுமைகள்
அனைத்திற்கும்
முடிவு ஒன்றே.



புதன், 24 அக்டோபர், 2012

எழுத்தாளனும் வாசகனும்



முகம் அறியாத வாசகனுக்கு எழுதும்
எழுத்தாளன் - எழுத்தில் தன் முகவரியைத்
தேடும் வாசகன்

எழுத்தாளனை கடந்து செல்லும்
வாசகனின் மாறும் முகவரிகள்

எழுத்தாளன் பயணத்தில் உதிர்ந்து போகும் வாசகன்
வாசகன் தேடுதலில் மறைந்து போகும் எழுத்தாளன்

பூத்துக் குலுங்கி புவி போற்றிய
சருகாகி மக்கிப் போன எழுத்துக்கள்

வண்டுகள் மொய்க்கும் பூக்களாக
காலம் கடந்து வாசகர்கள் கண்டறியும்
நிலைத்த முகவரிகள் இலக்கியத்தின் அடையாளம்



வெள்ளி, 5 அக்டோபர், 2012

தேறாத கவிதை ஒன்று


ஏதோ ஓர் உள்ளணர்வு எழுதத் தூண்டுகிறது. அதை எழுதி விடுகிறோம். அதைக் கவிதை என  நினைத்து ஆத்மார்த்தமான நண்பனுக்கு அனுப்பினால், இது கவிதையா எனக் கேள்வியே பதிலாக வருகிறது. இதை இருவருக்கு படித்துக் காட்டினேன் "
Are you ok?" எனப் புலன் விசாரிக்கும் ஒரு பார்வை. ஆனாலும் தோன்றியதை எழுதத் தானே என் வலைத்தளம். பதிவு செய்து வைப்போம். சரி கவிதைக்கு(?) வருவோம்.



எறும்பும் கடவுளும் 

 எங்கிருந்து வந்தது  இந்த எறும்பு 

ஏன்  இத்தனைப் பெரிய கூடத்தில் 
தனியே ஊர்ந்து செல்கிறது.

எதையோ தேடி பயணிக்கிறது.

திசை மாறி தேடியும் 
ஏமாற்றமே

உதவியின்றி சுவரில் முட்டி 
அதைப் பற்றி ஏறுகிறது 

 ஒரு கடவுளின் படத்தில் தஞ்சம் 
முகத்தருகே கடவுளை ஒரு பார்வை 
மெதுவாக இறங்கி கடவுளின் 
பாதத்தில் 

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஒரு கணிதக் கவிதை

மிக எளிய  கணிதக் கோட்பாட்டை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தக்
கவிதையைப் படித்தேன்.(http://mathematicalpoetry.blogspot.com/) அதனை தமிழிலும் மொழி பெயர்க்க முயற்சித்தேன். ஆனால் மூலத்தின் இனிமையை என்னால் அடைய முடியவில்லை(என் நண்பர் உதவி செய்தும்). இருந்தாலும் இரண்டு விதமான  தமிழின் மொழி பெயர்ப்பைக் கொடுத்துள்ளேன். உங்களால் அதைச் செம்மைப் படுத்த முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும். கவிதை இங்கே.

 Outside, cold rain
maps a deep night's constants
around a (couple)^0    

x ^௦ = 1 என்ற மிக எளிய, அறிமுகக் கணிதத்தை பயன்படுத்தி கவிதைக்கு மேருகேற்றியுள்ளார்  கவிஞர். அதாவது எந்த ஒரு எண்ணின் அடுக்குக்குறியும் பூஜ்யமாக இருக்கும் போது அதன் மதிப்பு ஒன்றாகும்.


தமிழில்:

வெளியே, குளிர் மழை

(ஜோடி)^Oவைச் சுற்றி

அடர் இரவின் மாறிலிகள் வரையும் 

அல்லது

வெளியே, குளிர் மழை


வரையும் ஓர் அடர் இரவின் மாறிலிகள்

(ஜோடி)^Oவைச் சுற்றி

 மழை பெய்யும் போது அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஓர் அலாதி அனுபவம். அதுவும் குளிருடன் கூடிய மழையெனில் கேட்கவே வேண்டாம். தனிமையில் சூடான டீ அல்லது காபி குடித்துக் கொண்டே இனிமையான இசையுடன் ஒன்றரக்  கலந்து மழையை ரசித்தல்....இது ஒரு புறம்.

எந்த ஓர் அடர் இரவிலும் தனிமையும், பயமும் மாறாத தன்மை கொண்டவைகள்.அதில் துணையுடன் இணைந்து  மகிழ்வது .....மற்றொரு வகை ஆனந்தம்.

மழையே பனிமழையாக இருந்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும். கற்பனைக்கு எல்லை ஏது?

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பசுவய்யா (சு.ரா) "வருத்தம்" கவிதை - பகிர்வு


இன்று கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்து சு.ரா.வின் கவிதைகள் படிக்கத் தொடங்கினேன். இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனதை ஏதோ செய்கிறது. 1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டக் கவிதை.நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கவிதையை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.


வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்.

சுந்தர ராமசாமி கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், விலை.ரூ.175 /=.

திங்கள், 24 ஜனவரி, 2011

ஸ்பெக்ட்ரமும், சு.ரா.வின் கவிதையும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஒன்று இல்லவே இல்லை என்று கூறும் கபில் சிபல் மற்றும் அவரோடு தோளோடு தோள் கொடுக்கும் தோழர்களுக்கும் இந்த சுராவின் கவிதைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. சு.ரா. இந்தக் கவிதையை எழுதியது போன நூற்றாண்டில்.




நடுநிசி நாய்கள்

இந்த நடுநிசி நாய்கள்
இருள் விழுங்குகையில்
தொண்டையில் சிக்கிக்
கத்திச் சாகின்றன.

தரை வெளுத்ததும்
பாதையோரம்
குனிந்த தலை குனிந்தபடி
மோப்பக் காற்றில் தூசிபறக்க
சாபத்தின் ஏவல்போல்
மனித மலங்கள்
தேடித் தெரிகின்றன.

கருப்பு விதைகாட்டி
பிட்டி சிறுத்துக் குலுங்க,
வெட்கம் கெட்டுத்திரியும்
இந் நடுநிசி நாய்களுக்கு
ஓய்வில்லை.
உறக்கமும் ஓய்வாக இல்லை.
கைஉயர்த்திப் பாசாங்கு காட்டும்
பள்ளிச் சிறுவனிடம் பயங்கொண்டு
இந் நடுநிசி நாய்கள்
பின்னங் காலிடை நுழையும் வாலை
வாய்கொண்டு பற்றி இழுத்து
பயங்கொண்டு வால்நின்று சாகின்றன.

முற்பகலில் மனம் மூட்டமடைய
நினைவுகளால் துக்கம் தேக்கி
சிறிது வலுச்சண்டை கிளப்பி
கடித்துக் குதறி
ரத்தம்கண்டு ஆசுவாசம் கொள்கின்றன.

பிற்பகல் ஒளிவெள்ளம்
பார்வையைத் தாக்க
இலைகளின் நிழல்கள் முதுகில் அசைய
சற்றே கண்மயங்கிக் கிடக்கின்றன.

மாலையில் கண்விழித்து
நால்திசையும் பார்வை திருப்பி
உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து
எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து
தேக்கிய சிறுநீர்
கம்பந்தோறும் சிறுகக் கழித்து
ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர
மாலை நடை செல்கின்றன.

அந்தியில் புணர்ச்சி இன்பம்
(ஒரு தடவை அல்லது இரு தடவை)
மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கித்
தொண்டை சிக்கக் கத்தல்.


நன்றி: சுந்தர ராமசாமி கவிதைகள் காலச்சுவடு பதிப்பகம்.

சனி, 1 ஜனவரி, 2011

எறும்பும் எழுத்தாளனும்


சுறுசுறுப்பாக என்ன செய்கிறாய்
என்று கேட்டான் எழுத்தாளன்
எறும்பைப் பார்த்து
"உணவு சேகரிக்கிறேன்
என்றது எறும்பு"

சேகரித்த உணவை என்ன
செய்வாய் என்றான் எழுத்தாளன்
"எறும்புகள் எல்லோரும் பகிர்ந்து
உண்டு விடுவோம் என்றது எறும்பு".

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று எறும்பு கேட்டது
எழுத்தாளனை
"இலக்கியத் தரமான எழுத்தை
தேன் தமிழில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்றான் எழுத்தாளன்".



எழுதி எழுதி என்ன
செய்யப்போகிறாய் என்றது எறும்பு
"நான் தான் படிக்கணும்
என்றான் எழுத்தாளன்".

ஒருமை



கோடான கோடி நட்சத்திர
நண்பர்கள் வெற்றிக் களிப்பு
இருள் கவிகிறது.




உக்கிரத்துடன் விரட்டுகிறது
வெப்பம் கக்கி இருளை
சூரியக் கதிர்கள்.
இருளும் ஒளியும் வேறுவேறா?

மறைவதற்கு உதிக்கிறது
உதிக்க மறைகிறது.
உதிப்பது மறைவது வேறுவேறா?

நாள்தோறும் நடக்கும்
இந்தப் போட்டி
வெற்றி தோல்வி
தோல்வி வெற்றி
வெற்றி தோல்வி வேறுவேறா?

எத்தனை காலம் இந்த
விளையாட்டு
வென்றாலும் வருத்தமில்லை
தோற்றாலும் மகிழ்ச்சி
வருத்தம் மகிழ்ச்சி வேறுவேறா?

வேறு தான் ஒன்றா?
ஒன்று தான் வேறா?

திங்கள், 6 டிசம்பர், 2010

அல்ஜீப்ரா பிடிக்காதா.. இந்தக் கவிதை பிடிக்கும்

பள்ளியில் படிக்கும் காலத்தில் கணிதம், குறிப்பாக, அல்ஜீப்ரா என்றால் அலறி அடித்து ஓடுபவர்களைக் காணலாம். இல்லை ஆசிரியர் சரியாக அமையாததால் கணிதத்தில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்படி இருந்தாலும் அல்ஜீப்ரா பற்றிய இந்தப் பகடியான கவிதையை கட்டாயம் நீங்கள் ரசிக்க முடியும். படித்து உங்கள் கருத்துக்களை உதிர்த்துச் செல்லுங்களேன்? இதைத் தமிழில் மொழி பெயர்க்க முயன்றேன். ஆனால் அந்தப் பகடியை என் மொழிபெயர்ப்பில் முழுவதும் கொண்டு வர முடியவில்லை. அதனால் ஆங்கிலத்தில் கவிதை இங்கே:

Life as Junior High School by Robert Hershon

You don’t think algebra is important
Mrs. Masterson said
but the day will come when you really need algebra
You’ll be terribly sorry you didn’t pay attention
When your life is in ruins and you are a laughing stock

Ha! The joke’s on you, lady
Decades have come and gone and
never once, not for a second, did I ever think:
Damn, if I only knew some algebra! Never once,
not for an instant. My hair’s turned white and never a
single regret -- ha ha ha ha ha

Unless -- that moment is still waiting up ahead,
when I’m 92 and trying to remember my shoe size,
my middle name, how many children I have . . .
And algebra might be the only answer!
I stand in the road, drooling and baffled --
and what’s that moving in the fog? Oh god,
it’s Mr, Gorman, wearing his devil suit and
waving a chemistry textbook

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இறைவன் கேட்ட வரம்


நிகரில்லா நண்பர்கள் கொடுத்த

இறைவனுக்கு நன்றி என்றேன்.

நன்றி சொல்லி நழுவாதே என

பொறாமையாகப் பார்த்த இறைவன்

வரம் ஒன்று வேண்டுமெனக் கேட்டான்.

கொடுப்பவன் கேட்க என்னிடம்

என்ன இருக்கிறது என்று நினைக்கையில்

உன் நண்பர்கள் குழுவில் சேர

அவர்களை அறிமுகப்படுத்து என்றான்.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

வீணை கேட்கும் நாதம்


மீட்டப்படாத வீணையின்
அருகில் அன்புடன்
படுத்திருந்தது - பூனை
எங்கு சுற்றினாலும் வந்துவிடும்
எனக் காத்திருக்கும் வீணை

மடியில் வைத்து
நெஞ்சோடு அணைத்து
விரல்களின் விளையாட்டில்
அருவியாகப் பாய்ந்த
நாதத்தின் சுவை உணர்ந்த
நாட்கள் தான் எத்தனை

இன்று மீட்கப்படாமல்
இருக்கும் வீணையைப் பற்றி
செய்தவன் கேட்டு வருந்தினான்.

மீட்ட காலங்களில் காற்றில்
மிதந்திருக்கும் நாதம்
இன்று வீணைக்கு மட்டும்
கேட்கிறது.

நாதமும் பூனையுமாக
கழியும் வீணையின் வாழ்க்கை.

செவ்வாய், 30 ஜூன், 2009

நண்பனின் பிரிவில்.....


ஆள்காட்டி விரலை பிடித்து
நடத்திச் சென்ற கணங்கள்

"பேபி சீட்டில்" கைகளின் அணைப்பில்
பள்ளி சென்ற நாட்கள்
"டாடாவின்" கையசைப்பில்
வாடிய உன் முகம்

"நல்லா படிக்கிறான்" என்ற போது
பெருமையில் சிரிப்பு

தவித்து நின்ற தருணங்களில்
தவறாத வழிகாட்டி

பிரிந்த போது கருணையின் மொழியில்
வந்த கடித வரிகள்

துள்ளும் மனமும் துயரின் நிழலும்
தொடர்ந்து செல்லும் நினைவுகளில்

பேசாத அரசியலா பகிராத அந்தரங்கங்களா
அறியாமலே நண்பனானாய் பதினான்கு வயதில்

என் இன்பத்திற்கு நீ கொடுத்த
தியாகத்தின் விலை
பசுமையான டாலரில்
மின்னும் வாழ்க்கை

தந்தையை இழந்து தவிக்காதவர்
யாரில்லை இவ்வுலகில் - ஆனால்
தாளாத துயரம் நண்பனின்
மீளாத பிரிவில் ...............

செவ்வாய், 16 ஜூன், 2009

அம்மா போடும் கோலம்


தூக்கத்திலிருந்து விழிக்கும் கதிரவன்
மரத்தினூடே பார்க்கும் இரண்டு காகங்கள்
தெரு ஓரத்தில் குறைக்கும் நாய்
தழுவிச் செல்லும் தென்றலால் சிலிர்க்கும் இலைகள்

தண்ணீர் தெளித்து பெருக்கித் தள்ளி
புள்ளிகள் வைத்தாள்
சில புள்ளிகள் நேராக
மற்றவைகள் வளைவாக இணைத்தாள்

கோலத்தின் அழகா? அம்மாவின் திறமையா?
விரிந்த விழிகளில் மகள் பார்க்க
கோலத்தை மிதித்து "பேப்பர்" எடுக்கச்
சென்ற அப்பா
புன்னகை மாறாமல் கோலத்தை
சரி செய்த அம்மா

அப்பா "சாரி" கேட்டால் என்ன
என்று மகள் கேட்க
"அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது"
என்றாள் அம்மா.

ஞாயிறு, 3 மே, 2009

தெரியவில்லை...

அம்மாவுக்குப் பிடிச்சா பிடித்தது
நண்பர்கள் சொல்லில் மயக்கம்
பிடித்தது தெரியாமல்
பிதற்றல் - அவளைப் பிடித்ததால்
பிடித்தது புரிந்தது
பாதி வாழ்க்கையில்
கடமையும் கனவுமாக
கடந்து செல்லும் காலம்

சனி, 27 டிசம்பர், 2008

ஜன்னல் வழியே


பசுமையான நாட்களை நினைத்து

உருகிக் காயும் உதிர்ந்த இலைகள்

துளிர்விடும் நாள் தொலைவில் இல்லை

என்ற நம்பிக்கையில் கிளைகள்

நிர்வாணமான கிளைகள் மேல்

மோகத்தில் பெய்யும் பனிமழை

பூமியின் பந்தத்தால் கட்டுண்ட வேர்கள்

ஜன்னல் வழியே பார்க்கும் அவன்

ஜன்னல் வழியே