செவ்வாய், 30 ஜூன், 2009

நண்பனின் பிரிவில்.....


ஆள்காட்டி விரலை பிடித்து
நடத்திச் சென்ற கணங்கள்

"பேபி சீட்டில்" கைகளின் அணைப்பில்
பள்ளி சென்ற நாட்கள்
"டாடாவின்" கையசைப்பில்
வாடிய உன் முகம்

"நல்லா படிக்கிறான்" என்ற போது
பெருமையில் சிரிப்பு

தவித்து நின்ற தருணங்களில்
தவறாத வழிகாட்டி

பிரிந்த போது கருணையின் மொழியில்
வந்த கடித வரிகள்

துள்ளும் மனமும் துயரின் நிழலும்
தொடர்ந்து செல்லும் நினைவுகளில்

பேசாத அரசியலா பகிராத அந்தரங்கங்களா
அறியாமலே நண்பனானாய் பதினான்கு வயதில்

என் இன்பத்திற்கு நீ கொடுத்த
தியாகத்தின் விலை
பசுமையான டாலரில்
மின்னும் வாழ்க்கை

தந்தையை இழந்து தவிக்காதவர்
யாரில்லை இவ்வுலகில் - ஆனால்
தாளாத துயரம் நண்பனின்
மீளாத பிரிவில் ...............

2 கருத்துகள்:

 1. ப்ரியங்கள் நிறைந்த பாஸ்கர்,அறிமுகத்திலேயே "ப்ரியங்கள் நிறைந்த"வை சேர்த்தது மிக சிலரே.
  "தந்தையையை இழந்து தவிக்காதவர்
  யாரில்லை இவ்வுலகில்.ஆனால்
  தாளாத துயரம் நண்பனின்"
  பார்க்க கிடைத்ததால் இருக்கலாம் என நினைக்கிறேன்.இதுவும் கூட போதாமல்தான் இருக்கிறது.கைகளை பிடித்து கலங்கி நின்றால் மனசு சமன் படலாம் ஒருவேளை.வாழ்த்துக்களும்,நிறைய அன்பும்!

  பதிலளிநீக்கு