மனிதர்களின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் எல்லையே இல்லை எனலாம். ஓடும் காலத்தின் போக்கில் நிகழும் முக்கிய மைல்கல்கள் வரலாற்றின் புதிய பக்கங்களாக மலர்கின்றன. அவைகளை நினைவு கூறும் விதமாக நினைவுச் சின்னங்கள் உருவாக்குவது ஒரு நடைமுறை. அதிலும் சில சமயங்களில் பொருத்தமான சின்னங்கள் நிறுவதுவது நிரந்தரத் தன்மையை எழுதிச் செல்கிறது. அதைப் போன்ற ஒர் அனுபவப் பகிர்வு..
சமீபத்தில் பாஸ்டனில் இருக்கும் MIT செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற வருடம் MIT யின் 150 வது வருடக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. அது சமயம் ஒருவர் அறிவியல் மற்றும் கணிதக் குறியீடுகளால் ஆன சிற்பம் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார். அதனை MIT முக்கியக் கட்டிடத்திற்கு எதிரில் நிறுவியுள்ளார்கள். அதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். அந்தக் குறியீடுகள் பயன்படும் விதம் குறித்து சிந்திக்கும் போது கிடைப்பது இரட்டிப்பு சந்தோசம். நீங்களும் பார்த்து மகிழுங்கள். இங்கு அந்த சிற்பத்தின் படம் மற்றும் ஒரு காணொளி இணைத்துள்ளேன்.