சுறுசுறுப்பாக என்ன செய்கிறாய்
என்று கேட்டான் எழுத்தாளன்
எறும்பைப் பார்த்து
"உணவு சேகரிக்கிறேன்
என்றது எறும்பு"
சேகரித்த உணவை என்ன
செய்வாய் என்றான் எழுத்தாளன்
"எறும்புகள் எல்லோரும் பகிர்ந்து
உண்டு விடுவோம் என்றது எறும்பு".
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று எறும்பு கேட்டது
எழுத்தாளனை
"இலக்கியத் தரமான எழுத்தை
தேன் தமிழில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்றான் எழுத்தாளன்".
எழுதி எழுதி என்ன
செய்யப்போகிறாய் என்றது எறும்பு
"நான் தான் படிக்கணும்
என்றான் எழுத்தாளன்".
nalla kavithai.
பதிலளிநீக்குhttp://kaatruveli-ithazh.blogspot.com/
நன்றி முல்லை அமுதன். உங்கள் காற்றுவெளி இதழ் படித்தேன், நன்றாக உள்ளது. தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு