வியாழன், 6 ஜனவரி, 2011

வைதீஸ்வரனின் கவிதை

இந்தக் கவிதை பிடித்திருந்தால் தயவு செய்து இப்போது நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்து மகிழவும்.

கால் மனிதன்; (கவிதைத் தொகுப்பு) எஸ். வைதீஸ்வரன், சந்தியா பதிப்பகம்

பரிசு

நெருங்கியவன்

தெரிந்த முகம் என்று

சிரித்து விட்டேன்

மிகச் சிநேகிதமாய். பதிலுக்கு

அவனும் சிரித்துவிட்டான்

நாகரீகமாய்


கடந்த பின் தான்

புரிந்தது.. அவனை

அறிந்தவன் நான் இல்லையென்று


எறிந்த சிரிப்பை மீண்டும்

திரும்பி வாங்க சாத்தியமில்லை


இருந்தாலும்

அறிமுகமற்ற மனிதனிடம்

அன்பு காட்ட முடிந்தது

இன்று ஒரு நல்ல ஆரம்பம் தான்

தவறுதலாக் இருந்தாலும் கூட.

4 கருத்துகள்:

  1. நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் அனுபவம்...நல்ல கவிதையாக! :-)

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்கு.. ஸ்டால் நம்பர் சொல்லுங்க... விலை...?

    பதிலளிநீக்கு
  3. பிரபாகரன், எனக்கு சந்தியா பதிப்பகம் ஸ்டால் எண் தெரியாது. ஆனால் உடுமலை.காம் ஸ்டால் 302 இல் கேட்டுப் பார்க்கவும். கட்டாயம் சிதம்பரம் உதவுவார். விலை 60 ரூபாய் என்று நினவு.

    பதிலளிநீக்கு