வியாழன், 6 ஜனவரி, 2011

கிறிஸ்டினா ரோச்செட்டி கவிதை


Christina Rossetti ஓர் ஆபூர்வமான கவிஞர். அவரின் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. இதன் ஆங்கில வடிவம் இங்கு படிக்கலாம். இங்குள்ள புகைப்படமும் அங்கிருந்து சுட்டதது தான். இந்தக் கவிதையைப் படிக்கும் போதல்லாம் விதவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளலாமே?

கடினமான ஏற்றம்

அந்தப் பாதை இறுதி வரை ஏற்றதை நோக்கி வளைகிறதா?
ஆமாம் இறுதி நுனி வரை
நாளின் பயணம் அந்த நீளமான நாளின் முழுமையும் எடுத்துக் கொள்ளுமா?
நண்பா, காலையிலிருந்து இரவு வரை

இரவு ஓய்வு எடுப்பதற்கு ஓர் இடமிருக்கிறதா?
மெதுவாக இருள் சூழும் நேரத்திற்கு ஒரு கூரை
வெளிச்சமின்மை என் முகத்திலிருந்து அதை மறைத்து விட்டால்?
அந்த விடுதியை நீ தவற விடமுடியாது.

இரவில் மற்ற வழிப் போககர்களை சந்திப்பேனா?
எல்லோரும் முன்னால் சென்றவர்கள்.
கண்ணில் படும் போது கதவைத் தட்டவா இல்லை கூப்பிடவா? .
அவர்கள் உன்னை கதவின் அருகில் நின்று கொண்டிருக்க விடமாட்டார்கள்.

பயணக் களைப்பும், அயர்ச்சியும் நீங்க எனக்கு ஆறுதல் கிடைக்குமா?
உழைப்பின் கூட்டுத் தொகையை கண்டறியலாம்.
மற்ற நாடுபவர்களுக்கும், எனக்கும் அங்கு படுக்கைகள் இருக்குமா?
ஆமாம், வருபவர்கள் எல்லோருக்கும் அங்கு படுக்கைகள் உண்டு.

2 கருத்துகள்: