சனி, 1 ஜனவரி, 2011

ஒருமைகோடான கோடி நட்சத்திர
நண்பர்கள் வெற்றிக் களிப்பு
இருள் கவிகிறது.
உக்கிரத்துடன் விரட்டுகிறது
வெப்பம் கக்கி இருளை
சூரியக் கதிர்கள்.
இருளும் ஒளியும் வேறுவேறா?

மறைவதற்கு உதிக்கிறது
உதிக்க மறைகிறது.
உதிப்பது மறைவது வேறுவேறா?

நாள்தோறும் நடக்கும்
இந்தப் போட்டி
வெற்றி தோல்வி
தோல்வி வெற்றி
வெற்றி தோல்வி வேறுவேறா?

எத்தனை காலம் இந்த
விளையாட்டு
வென்றாலும் வருத்தமில்லை
தோற்றாலும் மகிழ்ச்சி
வருத்தம் மகிழ்ச்சி வேறுவேறா?

வேறு தான் ஒன்றா?
ஒன்று தான் வேறா?

4 கருத்துகள்:

 1. அற்புதம் ... வரிகள் அழகு ..

  நல்ல சிந்தனை.... உங்கள் வித்தியாசமான பார்வைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அரசன் முதல் முறையாக என் தளத்திற்கு வந்து கருத்து விட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பார்வையாளன் எப்போதும் போல் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு