செவ்வாய், 30 அக்டோபர், 2012

முடிவு

 பயணத் தொடக்கம்
எல்லையற்ற வாசல்கள்
நுழைந்த ஒன்றில் பயணம்
மீண்டும் வாசல்கள் ..
நுழையும் வாசல் .
யாரோ சொல்ல
மலர்ந்த ஆசைகள்
துளிர்விட்ட  எண்ணங்கள்
மொட்டாகி உதிர்ந்த  நம்பிக்கைகள்
தோளோடு பயணித்த நட்புகள்
தோன்றி மறைந்து
தோன்றிய உறவுகள்
பாதையில் சுமைகள்
கடக்க கடக்க
ஒரு வழிப் பாதை
என் ஆசை
பாசம்
கோபம்
படிப்பு
பயம்
பெயர்
புகழ்
பணம்
உழைப்பு
நினைவுகள்
சிந்தனைகள்
கற்பனைகள்
எழுத்துக்கள்
உறவுகள்
நட்புகள்
சுமைகள்
அனைத்திற்கும்
முடிவு ஒன்றே.4 கருத்துகள்:

 1. மனம் கவர்ந்த அருமையான கவிதை
  அதிகம் சிந்திக்கவைத்துப் போனது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தொடர்ந்து என் எழுத்தைப் படித்து கருத்துரையும் விட்டுச் செல்வதற்கு மிக்க நன்றி.

   நீக்கு