முகம் அறியாத வாசகனுக்கு எழுதும்
எழுத்தாளன் - எழுத்தில் தன் முகவரியைத்
தேடும் வாசகன்
எழுத்தாளனை கடந்து செல்லும்
வாசகனின் மாறும் முகவரிகள்
எழுத்தாளன் பயணத்தில் உதிர்ந்து போகும் வாசகன்
வாசகன் தேடுதலில் மறைந்து போகும் எழுத்தாளன்
பூத்துக் குலுங்கி புவி போற்றிய
சருகாகி மக்கிப் போன எழுத்துக்கள்
வண்டுகள் மொய்க்கும் பூக்களாக
காலம் கடந்து வாசகர்கள் கண்டறியும்
நிலைத்த முகவரிகள் இலக்கியத்தின் அடையாளம்
படைப்பாளிக்கும் வாசகனுக்கிடையிலான
பதிலளிநீக்குஅந்த மெல்லிய உறவை மிக மிக நேர்த்தியாகச்
சொல்லிப் போகும் கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
எழுத்தின்மீது உள்ள நேசிப்பு தெரிகிறது ஒவ்வொரு வரிகளிலும். அருமை!
பதிலளிநீக்குஅருமையாக சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி ரமணி, சுப்பிரமணியன், திண்டுக்கல் தனபாலன்.
பதிலளிநீக்கு