வெள்ளி, 1 மே, 2009

ஜெயலலிதாவின் நம்ப முடியாத ஈழ மோகம்

மாற்றி மாற்றி பேசுவது ஜெக்கும்,கருணாநிதிக்கும் கைவந்த கலை.ஜெக்கு தீடிரென ஏன் இந்த கரிசனம் ஈழத்தின் மீது? பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும்.இத்தனை நாள் இல்லாத சிந்தனை ரவி ஷங்கர் காண்பித்த வீடியோவினால் வந்ததா? நம்ப முடியவில்லையே.
ஈழம் பெற்றுத் தந்தால்,விடுதலைப் புலிகளின் இயக்கத்தை என்ன செய்வார்?ஈழத்தோடு புலிகளையும் ஆதரிக்கிறாரா?இந்திய இராணுவத்தை அனுப்பி, இலங்கையுடன் போர் நடத்தத் திட்டமா?

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல
என்ற திருக்குறளுக்கு ஏற்ப இந்திரா காந்தி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் பல உலகநாட்டுத் தலைவர்களை சந்தித்து,ரஷ்யாவுடன் ஓப்பந்தம் செய்து,மிகச் சாதுர்யத்துடன் பங்களாதேஷ் போரை நடத்தினார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் ராஜீவ் காந்தி இந்திய அமைதிப் படையை அனுப்பியதின் பலனை இன்றும் அனுபவிக்கிறோம்.தேர்தல், ஓட்டு,பதவி போன்றவைகளுக்கு ஆசைப் பட்டு நினைத்ததைப் பேசுவது,சிந்திக்காமல் உறுதி மொழி கொடுப்பது தலைவர்களின் பொழுது போக்காகிவிட்டது.
இதை எதிர்கொள்ள கருணாநிதி நாங்கள் 50௦ வருடமாக ஈழத்தை ஆதரிக்கிறோம் என்கிறார்.இந்தக் கூத்துக்களுக்கு நடுவே அங்கே இலங்கையில் மனிதர்கள் பட்டினியாலும்,பிணி யினாலும்,குண்டுகளுக்கும் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசு உடனடியாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் பேசி இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்.தேர்தல் நேரம் என்று பார்க்கக் கூடாது.வெளி விவகாரத்தைக் கையாளும் முறையில் இந்த அரசு பெரிய அளவில் தோல்வியைக் கண்டுள்ளது.தமிழர்கள் என்று கூட பார்க்க வேண்டாம்.மனிதாபமான முறையில் உதவ வேண்டும்.இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தெரிந்தும், இந்த பதிவு இடுவது மன வேதனைக் குறைக்கும் சுயநலம் தான்.

6 கருத்துகள்:

 1. ஜெயலலிதாவின் திடீர் பாசம் ஈழச் சிந்தனையாளர்களுக்கு பால்வார்த்தது போலிருக்கிறது. இதுவெறும் தேர்தல் வேஷம் என்று சீக்கிரத்தில் தெரிந்துவிடப் போகிறது. கலைஞருக்கு நாக்கில்தான் விஷம் என்றால் அம்மையாருக்கு உடம்பு முழுவதும் விஷம். இதுவரை ஈழத்துக்காக உண்மையாக குரலெழுப்பியது இவர்களுக்கு புரியவில்லையாம். ஒரு குருஜி சொன்னதும் சிஷ்யைக்கு விளங்கிவிட்டதாம். இதை நம்புவதைவிட பெரிய பைத்தியக்காரத்தனம் ஏதுமில்லை. இலங்கைப் பிரச்சனையில் இங்குள்ளவர்களின் கையலாகாத்தனத்துக்கு ஒரு முக்கிய காரணம் படக்வி வெறி(இது ராஜபகக்ஷேக்கும் பொருந்தும்). இப்பிரச்சனையில் ராமதாசைப் போல ஒரு பொய்யன் எவனும் இருக்கமாட்டான்.

  பதிலளிநீக்கு
 2. ஈழத்தமிழர்கள் கடலில் மிதந்து துரும்பைப் பிடிக்க முயல்கிற நேரத்திலே ஒரு ஓட்டைப் படகை அனுப்புகிறார் கதாநாயகி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  அம்மையாரை நம்பிய அனைவரையும் காலணியை மாற்றுவது போல மாற்றி,
  பார்ப்பன அறிவாளிகளின் நரித் தந்திரத்தைக் கடைப்பிடிப்பது தான் வாடிக்கை.

  இதிலே ஏமாந்து காலணி ஆகி விடாதீர்கள்!!!!

  பதிலளிநீக்கு
 3. //ஈழத்தமிழர்கள் கடலில் மிதந்து துரும்பைப் பிடிக்க முயல்கிற நேரத்திலே ஒரு ஓட்டைப் படகை அனுப்புகிறார் கதாநாயகி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.//

  எனது எண்ணமும் இதுவே!

  //இந்திய அரசு உடனடியாக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் பேசி இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்.தேர்தல் நேரம் என்று பார்க்கக் கூடாது.வெளி விவகாரத்தைக் கையாளும் முறையில் இந்த அரசு பெரிய அளவில் தோல்வியைக் கண்டுள்ளது.//

  பதிலளிநீக்கு
 4. நன்றி செல்வா. ஆனால் இது எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை.பிரபாகரனை பிடிக்கும் வரை இலங்கை அரசு ஓயாது போல் தெரிகிறது.சாதாரண மக்கள் அவதியுறுவது தான் மிகவும் வருந்தத் தக்க ஒன்று.

  நன்றி அஸ்குபிஸ்கு
  உங்கள் வலைத் தளமும் நன்றாக .இருந்தது. வருகைக்கு நன்றி.

  அனானிக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் கூறுவது மிகவும் சரி. ஆனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் ஜெயலலிதாவை தங்கள் தலைவியாகவே ஆக்கிவிட்டார்கள். பிரபாகரன் பிடிபடுவது அல்ல பிரச்சனை.தமிழ் மக்கள் அவதியுறுவது தான் மிகவும் வருந்தத் தக்கது.

  பதிலளிநீக்கு
 6. அனானி உங்கள் வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு