வெள்ளி, 22 மே, 2009

"அரசை நான் நடத்த வேண்டாமா?" கருணாநிதிக்கு மன்மோகன் சிங் பதிலடி


தான் சொல்லிய படி எல்லாம் ஆடி வந்த பிரதமர் மன்மோகன் சிங் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறியது தான் கருணாநிதியை கோபத்தோடு சென்னை திரும்ப வைத்தது. இவர் இருக்கும் இடம் தேடி 2004ம் ஆண்டு வந்த காங்கிரசார், இன்று உடல் நிலை சரியில்லாத போதும் அவர்களைத் தேடி வரும் படி செய்தது பரிதாபம் தான்.

அப்படியாவது முறைத்துக் கொண்டு வந்தால் பதவி ஏற்பு விழா நடக்காது என்ற கனவு பொய்த்துப்போனது. "அரசை நான் நடத்த வேண்டாமா?" என்று மென்மையாக அதே நேரத்தில் கடுமையாக மன்மோகன் கூறியது தி.மு.கவை ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது. மேலும் சோனியா தன் பக்கம் இருந்து ஆதரிப்பார் என்று எதிர் பார்த்த கருணாநிதிக்கு பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது.

குறிப்பாக அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட இலாக்காகளை நேர்மையான,திறமையான நபருக்கு கொடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் நினைப்பது தவறில்லை.பாலுவும்,ராஜாவும் ஊழலின் இரு பக்கங்களாக சென்ற ஆட்சியில் இருந்ததாக எல்லா பத்திரிகைகளும்,குறிப்பாக வட நாட்டு ஊடகங்களும் பிரசாரம் செய்து வருகின்றன.

இப்போது உள்ள நிலையில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கவிதை எழுவதைத் தவிர கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியாது. கருணாநிதியின் "கருணையில்" சென்ற ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் இன்று "கருணை" காட்டாமல் போனது காலத்தின் கோலம்.பொறுத்திருந்து பார்ப்போம் கருணாநிதி பொங்கி எழுகிறாரா அல்லது பதுங்கிப் போகிறாரா என்று?

9 கருத்துகள்:

  1. பெயரில்லா23 மே, 2009 அன்று 12:30 AM

    பதவி இல்லாமல் அவர்களால் ஒருநாள் கூட இருக்க முடியாது. ருசி கண்ட பூனைகள். கப்பலையில் டெலிகாமையும் விட மாட்டாங்க. எதாவது சாக்கு சொல்லி கூட்டுப் போட்டுவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. சும்மா சூப்பரா வச்சாங்க ஆப்பு ;)

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு பாஸ்கர்..
    இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
    {முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
    வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
    நம்ம பக்கமும் வாங்க..

    பதிலளிநீக்கு
  4. வேணாம் விட்டுறு அப்புறம் அழுதிடுவேன் எவ்வளவு நாளைக்குத்தான் சோனியா வcச ஆப்பு வலிக்காத மாதிரி நடிக்க முடியுமோ தெரியல

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா நல்லா சொன்னீங்க. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சுரேஷ் வருகைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. கலையரசன் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் வடலூரன் தளம் வந்து போனேன்.உங்கள் ஆப்பும்,ஹைகூவும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. பூபதி பெருமாள் வடிவேலு தோற்றார் போங்கள். வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா23 மே, 2009 அன்று 1:04 PM

    பாதி உண்மைகளைப் பதிவிட்டுப்
    பதிவுலகத்தை மஞ்சள் பத்திரிக்கையாக்கத் துடிக்கும்
    படித்தவர்களே, வாழ்க !

    நகைச்சுவை வேண்டும்,அது நல்ல சுவையாக இருந்தால் நல்லது.
    அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்துக்களைப்,பேச்சுக்களை படிப்பது பயன் தரும்.

    அரசியல் ஒரு எண்ணிக்கை விளையாட்டு.கை ஓங்கியவர் மிஞ்சுவதும்,குறைந்தவர் கெஞ்சுவதும் வாடிக்கை.
    காங்கிரசை வதக்க ஒரு மம்தா போதும்.வேடிக்கை ஆரம்பித்துள்ளது.

    பதிலளிநீக்கு