வியாழன், 28 மே, 2009
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் கருணாநிதியும்,வரலாறும்
தமிழ் நாட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும், குதுகலமாகவும் இருக்கும் நபர் முதலமைச்சர் கருணாநிதியாகத் தான் இருக்க முடியும். அதில் தவறு ஒன்றுமில்லை.சமீபத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றிகள் மகத்தானவைகள் என்றால் மிகையாகாது.வெற்றிகளின் பட்டியல் இதோ:
1. பாராளுமன்றத் தேர்தலில் பலமுனை எதிர்ப்பையும் முறியடித்து வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.குறிப்பாக அவர் மகன் அழகிரியின் வெற்றி அவரை இன்பக் கடலில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
2. கூடவே இருந்து கருணாநிதியையும்,தி.மு.கவையும் கடுமையாகத் தாக்கி வந்த ராமதாஸ் மண்ணைக் கவ்வியதில் பேரானந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தான் வேண்டுமா?
3. தன்னுடைய பரம எதிரியான எம்.ஜி.யாரின் கட்சி மத்திய அரசின் பக்கம் தலை வைக்க முடியாமல் கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வரும் சாதனை மனதைக் குளிர வைக்காமல் என்ன செய்யும்?
4.பொது வாழ்வுக்காக தன் வாழ்கையையே அர்பணித்துக் கொண்டாலும், தன் குடும்பங்கள் மீது தீராத பாசம் வைத்திருக்கும் கருணாநிதிக்கு மகன்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பீடத்தில் அமருவதைக் கண்டு மனம் குதூகலிக்காமல் என்ன செய்யும்?
5. அத்தனை இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கருணாநிதியைத் தேடி வந்த போது, விடுதலைப் புலிகள் மட்டும் எம்.ஜி.யாரைத் தேடிச் சென்றனர். அந்த விடுதலைப் புலிகள் இன்று தோற்றது இவருக்கு மகிழ்ச்சியைத் தராமல் இருக்க முடியுமா?
வரலாறு இவரைப் பற்றி என்ன சொல்லும்?
1. கடந்த ஐம்பது வருடங்களாக தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒருவர் உண்டென்றால் அது கருணாநிதி தான்.இவர் இல்லாத வரலாறு நினைத்துக் கூட பார்க்க முடியாது
2. எத்தனையோ விதமான வேறு பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் (ஊழல்,அராஜகம்,தன குடும்பத்தை முன்னிறுத்துதல்), இவர் சாதாரண மக்களுக்கு செய்த உதவிகள் மறுக்க முடியாதவை.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும் இவருக்கு பெருமை சேர்க்கும்.
ஆனால் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டத்தின் மீது தான் அவருக்கு மிகுந்த பற்று இருந்தது. அது இப்போது அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகும்.குறிப்பாக 1980 களில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவர் காட்டிய வேகம் அவரை "உலகத் தமிழர்களின் தலைவர்" என்ற பட்டத்தை நோக்கி இட்டுச் சென்றது. ஆனால் இன்று "அவர் இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கப்பட்ட ஈழப் பிரச்சனைக்கு" கடிதம் எழுதுவது,தந்தி அடிப்பது,கவிதை எழுதுவது போதும் என்று நினைத்து விட்டார் போல் உள்ளது.இன்று பெற்ற பதவிகள் சுகம், நாளைக் கிடைக்கப் போகும் பட்டத்தை விட குதுகலமானது இல்லையா? பட்டம் கிடைக்கவில்லை என்றால் என்ன? ஆண்டவன் தீர்ப்பு என்று புலம்பாமல் அடங்கிப் போக வேண்டியது தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருணாநிதி யூஸ் பண்ற லெட்டர் பேடையும் , பேனாவையும் யாராவது எடுத்து அவர் கண்ணுக்கு படாமல் ஒளித்து வைத்தால் தமிழினம் பிழைக்கும்.
பதிலளிநீக்குஅங்க ஒருத்தன் 'குண்டு' போட்டு கொல்றான், இங்க இவரு 'இங்க்' ஊத்தி கொல்றார்.
கனிமொழிகும் கேட்ட மாதிரி அமைச்செர் பதவி கிடைச்சு இருந்தா இன்னும் சந்தோசமா இருந்து இருப்பார்.. :)
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் துயரமும் மனத்தளவே.
பதிலளிநீக்குமனம் சமன்பட்டால் மகிழ்ச்சியும் ஒன்றுதான் துக்கமும் ஒன்றுதான்.
புகழும் பட்டமும் நிழல்போல.
நன்றாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குயார் எக்கேடு கெட்டால் என்ன. குடும்பம், பதவி தான் முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
நன்றி அஹோரி மற்றும் அனானியாக வந்து சென்றவர்களுக்கு.
பதிலளிநீக்குபெரும்பாலும் தமிழ் சமுதாயம் வேதனையும் வருத்தமும் சந்திக்கும் வேளையில், ஒரு குடும்பமானும் சந்தோஷமா இருக்கட்டுமே ஐயா . தமிழன் வாழ்வதில் உமக்கு என்ன வயத்தெரிச்சல்!
பதிலளிநீக்குநன்றி ராஜ் மற்றும் சௌரி அவர்களுக்கு.
பதிலளிநீக்கு