வியாழன், 20 டிசம்பர், 2012

நித்யஸ்ரீக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

 இன்று காலை என்றும் போல் முகநூலை மேய்ந்தேன். பொதுவாக முகமறியாத முகநூல் நண்பர் ICARUS பிரகாஷ் அவர்களின் போஸ்ட்களை தவறாமல் படிப்பதுண்டு. இன்று பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் இதை ஜீரணிக்க முடியவில்லை.

நித்யஸ்ரீயின் கர்நாடக இசை பாடும் முறையைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. சிலர் அவர் பாடுவதை நிராகரிப்பவர்களும் உண்டு.(தமிழ் நாட்டைப் பொருத்த வரை இரண்டும் ஒன்று தான்.) ஆனால் எனக்கு அவர் பாடலை பொதுவாக விரும்பிக் கேட்பேன். அவருடைய எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத வார்த்தைத் தெளிவு மிகப் பெரிய பலம்.



ஆனால் இன்று அவருக்கு நடந்திருப்பது மிகப் பெரியக் கொடுமை. ஒரு பெண்ணாக தன் கணவனையும் இழந்து, பலருடைய கொடுமையான கற்பனைகளையும், இழிவான பேச்சுக்களையும் எதிர் கொண்டு வாழ வேண்டிய பரிதாபமான நிலையில் உள்ளார். ஒரு பூத்துக் குலுங்கும் ரோஜாத் தோட்டத்தில் ஆசிட் ஊற்றியது போல் ஆகி விட்டது.

அவர் கணவரின் மரணத்திற்கும் அவரை குறை சொல்லவே பெரிய கூட்டமே காத்திருக்கும். அவரைப் பற்றிய சொந்த விஷயங்களைப் பற்றிய விவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். இந்தத் துன்பத்திலிருந்து அவர் மீண்டு வர அது மிகவும் உதவும். இந்த ஆண் ஆதிக்க உலகில் பெண்ணாகப் பிறந்து பிரபலமனாவர்களுக்கும் வாழ்வது சுலபமில்லை.

இந்த நீங்க முடியாத துன்பத்திலிருந்து அவர் மீண்டு வர அவருக்கு தேவையான சக்தியை இயற்கை கொடுக்க வேண்டும். நித்யஸ்ரீக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

12 கருத்துகள்:

  1. பிரபலமான ஒருவரை குறை சொல்வது நம் ஊரில் மிக அதிகம். அது நம் ஒவ்வொருவரின் உள் மன விகாரம் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் அவருக்கு தேவை அமைதி. அதை தர இறைவனை வேண்டுகிறேன். அவர் மனம் உருகி பாடியதை கேட்டு மகிழ்ந்த இறைவன் அமைதியை பதிலுக்கு அளிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  2. hello appo sethavan enna pavam panninan , ivlo panm irundhum en savanum , enna karanum , ellam intha pomblaingalathan , avukku konjam parithabapadungappa

    பதிலளிநீக்கு
  3. மற்றவர்கள் மீது சேறு வாரி இறைப்பது நம்ம மக்களுக்குக் கைவந்த கலை. அதிலும் பெண்கள் மீது என்றால் இன்னும் விசேஷம்:(

    இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் இருந்து மீண்டு வர நித்யஸ்ரீக்கு மனஉறுதி கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்.

    உங்கள் பதிவு அருமை. தெளிவோடு இருக்கின்றது. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் இருந்து மீண்டு வர நித்யஸ்ரீக்கு மனஉறுதி கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  5. பொது இடங்களில் நாகரித்தை பேச்சிலும் செயல்பாட்டிலும் கடைபிடிப்பவர். மனதுக்கு பாடகி சித்ராவின் வாழ்வில் நடந்ததற்குப் பிறகு இவரின் வாழ்வில் நடந்த இந்த துக்கத்திற்கு மனம் ரொம்பவே வருத்தப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் அனுதாபத்தை என்னுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டு கருத்துரை விட்டுச் சென்ற அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. இறந்தவரின் மனம் சாந்தி அடையட்டும். இந்த அழிவிலில் இருந்து மீண்டு வர நித்யஸ்ரீக்கு மனஉறுதி கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்.
    இதைவிட வேறு என்ன சொல்ல....

    பதிலளிநீக்கு
  8. //ஒரு பூத்துக் குலுங்கும் ரோஜாத் தோட்டத்தில் ஆசிட் ஊற்றியது போல் ஆகி விட்டது.//


    செய்தி அறிந்ததுமே நானும் இவ்வாறே நினைத்தேன். எவ்வளவு திறமைமிகுந்தவர் அவர் வாழ்வில் இப்படியா? அவர் கை உயர்த்தி பாடும் போது தான் எத்தனை கம்பீரம். ஆனவத்தின் சுவடே தெரியாமல் இருக்கும் இவர் இந்தத் துயரத்தில் இருந்து மீண்டுவர இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  9. நித்யஸ்ரீ.. அருமையான பாடகி, சில நாட்களுக்கு முன்னர் கூட அபிராமி அந்தாதியை சென்னை தொலைக்காட்சியில் அருமையாக பாடிக்கொண்டிருந்தார். பலமுறை அவருடைய கணவர் மிகவும் குடுத்து வைத்தவர் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் மற்ற எல்லா சாதரண குடும்பத்தைப் போலவே (செய்தித்தாள்களின் வாயிலாக) ஆணாதிக்கத்தால் சிதைந்தை எண்ணி மணம் சஞ்சலமடைகிறது. மீண்டும், இந்த இழப்பில் இருந்து மீண்டு தனது வாழ்வை வசந்தமாக்கி கொள்ளவேண்டும் என்றே விரும்பும்.

    அன்புள்ளம்
    சிவபார்க்கவி

    பதிலளிநீக்கு
  10. Hi Nithyashree,your music has always been giving "peace" to millions of fans which helped many to forget their worries and carry on with life...

    The same Music will help you to come out of your present problems too..Afriend of mine by name VVS Manian had written an article in Trinity Mirror(www.trinitymirror.net)titled"The Skylark Should not lose it's spark"...Pls read...

    Start singing again...The Music industry will always need your services...Pls do not procrastinate your decision to sing...

    Come on Nithya ...Make a very very quick come back with a Bang... Bhagwan Yogi Ram Surat Kumar will ensure you to come out of all the present hurdles and guide you in all future actions...

    We will keep praying for you always for your welfare... Thuyarathil irrundhu meendu vaa...Meendum Paada Vaa...

    All the very best for all your future concerts...

    Regards,

    T.L.Kumaramurthi.

    பதிலளிநீக்கு