திங்கள், 3 டிசம்பர், 2012

மொழிபெயர்ப்பு கவிதை மாயா என்ஜெலோ (Maya Angelou)

மாயா என்ஜெலோ (Maya Angelou) என்ற அமெரிக்க கவிஞர் சிறு வயதில் பல அடக்கு முறைகளுக்கு உள்படுத்தப்பட்டார். அவர் வாழ்வின் அனுபவங்கள் கவிதை வடிவில் அழியாத இலக்கியமாக உருவெடுத்துள்ளது. அவர் எழுதிய மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான “Still I rise” என்ற கவிதையின் மொழிபெயர்ப்பை இங்கு கொடுத்துள்ளேன்.

சிறு வயதின் வளர்ப்புச் சூழல் மற்றும் வாழ்வில் கடந்து வந்த பாதை ஒவ்வொரு மனிதனின் உள்ளும் சில முன் முடிவுகளையும், வடுக்களையும் அடி மனத்தில் விட்டுச் செல்கிறது. என்ன தான் உயர்ந்த எண்ணங்களுடன் வாழ முற்பட்டாலும், பெரும்பாலனவர்களுக்கு அந்த ஆழ் மனச் சிக்கல்கள் மேலுழுந்து மனிதாபிமானத்தை முற்றிலும் துறக்கச் செய்யும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாதாகிறது.

அந்த நேரங்களில் இதைப் போன்ற இலக்கியம் வாசித்தல் மனிதனை மேம்படுத்திக் கொள்ள மிகவும் உதவுகிறது. இந்தக் கவிதை அடக்கு முறைக்கு உள்ளாகும் கடைசி மனிதன் இருக்கும் வரை வாழும் என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடுமில்லை.



இருந்தும் நான் எழுகிறேன்.



நீ என்னை எழுதி வைக்கலாம் வரலாற்றில்
உன்னுடைய கசப்பான, திரிக்கப்பட்ட பொய்களால்.
நீ என்னை அமுக்கலாம் அந்த அழுக்கில்
ஆனாலும், தூசியைப் போல், நான் எழுகிறேன்.

என்னுடைய இடக்குத்தனம் உன்னை எரிச்சலடைய செய்கிறதா?
ஏன் தீவிரமாகத் தாக்கப் பட்டிருக்கிறாய் அந்தகாரத்துடன்?
ஏனென்றால் நான் நடக்கிறேன் நான் எண்ணைக் கிணறுகள் பெற்று
என்னுடைய வசிக்கும் அறையில் இறைப்பது போல்.


சந்திரன்கள் போல் மற்றும் சூரியன்கள் போல்,
அலைகளின் நிச்சியத்துடன்,
உயர்ந்து துள்ளும் நம்பிக்கைகள் போல்,
இருந்தும் நான் எழுகிறேன்.

நான் உடைவதை பார்க்க நீ விரும்பினாயா?
குனிந்த தலை மற்றும் தாழ்ந்த கண்களுடன்?
தோள்கள் கீழே விழும் கண்ணீர் துளிகள் போல்,
சக்தி இழந்த என்னுடைய உணர்ச்சிப் பண்பார்ந்த அழுகைகளை.

என்னுடைய தாழாமை உன்னை புண்படுத்துகிறதா ?
எடுத்துக் கொள்ளவில்லையா நீ அதனை மட்டுமீறிய கடினத்துடன்
ஏனெனில் நான் சிரிக்கிறேன் நான் தோண்டப்படுகின்ற
தங்கச் சுரங்கங்கள் வைத்திருப்பதைப் போல்
என்னுடைய சொந்த புழக்கடையில்

நீ என்னை சுடலாம் உன் வார்த்தைகளால்,
நீ என்னை வெட்டலாம் உன் கண்களால்,
நீ என்னை கொல்லலாம் உன் தீவிர வெறுப்பூட்டுதலால்
இருந்தும், காற்றைப் போல், நான் எழுகிறேன்.

என்னுடைய பாலியல் கவர்ச்சி உன்னை வேதனைப் படுத்துகிறதா?
அது ஓர் ஆச்சிரியமாக வந்திருக்கிறதா
நான் நடனமாடுவது நான் என்னுடைய இரண்டு
தொடைகள் சந்திக்கும் இடத்தில் வைரம் வைத்திருப்பது போல் ?

வரலாற்றின் அவமானக் குடிலின் வெளியிலிருந்து
நான் எழுகிறேன்.

அந்த வலியின் மூலத்தாலான பழமையின் மேலிருந்து
நான் எழுகிறேன்.

நான் ஒரு கருப்புக் கடல், குதிப்பு மற்றும் அகலம்,
பீறிட்டும் துள்ளலும் நான் கொண்டிருக்கிறேன் அலையில்.
இரவுகளின் அச்சுறுத்தலையும் பயத்தையும் பின் விடுத்து
நான் எழுகிறேன்.
அந்த என்னுடைய மூதாதையர்கள் கொடுத்த கொடைகளைக் கொண்டு வருகிறேன்
நான் அந்த கனவு மற்றும் நம்பிக்கை அடிமைக்கு.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.
நான் எழுகிறேன்.

இந்தக் கவிதை மலைகள்.காம் இணைய இதழில் வெளியானது.

2 கருத்துகள்: