சனி, 29 டிசம்பர், 2012

எழுத்தாளர் எஸ்.ரா மற்றும் சொல்வனத்திற்கு என் நன்றிகள்


நான் படித்து ரசித்த கணிதம் மற்றும் கணித மேதைகளைக் குறித்து தமிழில் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் என் தளத்தில் எழுதத் தொடங்கினேன்.கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பது போல் 10,15 பேர் தான் படித்து வந்தார்கள். அந்த சமயம் தான் சொல்வனம் என் கணிதக் கட்டுரைகளை வெளியிட சம்மதத்தது. அதன் பொருட்டு எனக்கும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சொல்வன ஆசிரியர்கள் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மேலும் எழுத்தாளர் எஸ். ரா. அவர்கள் என் ப்லோறேன்ஸ் நைட் இன்கேல்  கட்டுரையை அவர் தளத்தில் அறிமுகப் படுத்தியது எதிர்பாராத ஒன்று. ஆலென் டுரிங் குறித்த கட்டுரையை அவர் படித்ததில் சிறந்த அறிவியல் கட்டுரையாக அவர் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஊக்கத்தை கொடுக்கிறது.

எஸ்.ரா அவர்களுக்கு என் நன்றிகள்.இதுபோல் கணிதத்தைப் பற்றி எழுதுவதால் எனக்கு ஓரூ  வித மன அமைதி கிடைக்கிறது. இந்தப் பதிவுகளை படிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும், தெரிந்த சிறுவர்களுக்கும் பகிர்ந்து கொண்டால் அது அவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் அறிந்து கொள்ள ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த என் விருப்பத்துக்கு உதவும் சொல்வனம் மற்றும் எஸ்.ரா அவர்களுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றையும் விட என் பதிவுகளை  தவறாமல் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக