ஞாயிறு, 19 டிசம்பர், 2010

விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு - Miroslav Holub கவிதை



இந்தக் கவிதையைப் பற்றி என்ன சொல்ல? சென்ற வருட இலங்கைப் போர் தான் கண் முன் தெரிகிறது. நீங்களே படித்து உணருங்கள்.
பில்சென் Holub வாழ்ந்த ஊர்.

விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு

பில்சனில்,
இருபத்தியாறு ஸ்டேஷன் தெரு,
அவள் மூன்றாவது மாடிக்கு ஏறினாள்,
மேல் மாடியில், முழு இல்லத்தில் மீதமிருந்தது அதுவே.
கதவைத் திறந்தாள்,
அது வானத்திற்கு இட்டுச் சென்றது,
பாதளத்திலிருந்து ஆரம்பித்தது.

ஏனென்றால் இங்கு
உலகம் முடிவடைந்தது.

பிறகு அவள் கதவை அழுத்தமாக மூடினாள்
அப்போது தான்
சிரியாசோ
இல்லை அல்டேபறேனோ
அவளை சமையலறையிலிருந்து கூப்பிட முடியாது,
படிகளில் இறங்கினாள்
அவள் இடத்தை எடுத்துக் கொண்டாள்,
காத்திருந்தாள்
வீடு மீண்டும் உருவாகி வர
அவள் கணவன் வீட்டிற்கு மீண்டு வர
சாம்பலிலிருந்து,
குழந்தைகளின் கால்கள்
மீண்டும் சிக்கென ஊன்ற.

காலையில் கண்டறிந்தார்கள்
அவள் கல்லாக மாறியதை.
சிட்டுக்குருவிகள் அவள் கைகளில் கொத்தின.

7 கருத்துகள்:

  1. அடர்த்தியான கருத்துகளைத் தாங்கிய கவிதை. மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றி.

    தொடரட்டும் தங்கள் இலக்கிய சேவை!

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் பார்வையாளன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என்ன சொல்வதென்று தெரியவில்லை... நன்றி....

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜீ மற்றும் பிரபாகரன்.

    பதிலளிநீக்கு