செவ்வாய், 21 டிசம்பர், 2010

நகுலனின் இரண்டு கவிதைகள்



நகுலனின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழ்மனதில் இருந்து வருபவைகள் அவர் கவிதைகள்.தனிமையையும், யதார்தத்தையும் அழகாக சித்தரிக்கும் இரண்டு கவிதைகள் இங்கே: படித்து மகிழுங்கள்.


காத்திருந்தேன்


மீண்டும் வீதியில் யாருமில்லை

வெறும் தனிமை

வெகு துலைவில்

வேகம் குறைந்து வரும்

டாக்ஸி என் வீடும் வரும் என்று

நம்பிக்கையின்

வேதனை தாங்கி,

நான் வாழ மனந்தூண்ட

நான் வறிதே வீற்றிருக்க

வந்த வண்டி

என் வீடு தாண்டிப் போகும்.


இவர்கள்


உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்து

பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்

சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து

விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்

பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே

பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு

காலியானாலும் வீடு நிறைய சாமான்

களை வாங்கி வைக்கிறார்கள். உடமை

கருதி செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்

முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்

டேன்" என்கிறான் என்று பொறுமை

இழந்து நிறகிறார்கள். எல்லாவற்றிலும்

அதிசயம் என்ன வென்றால் இவர்கள்

தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை

என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்


இவர்களுடன் தான் உறவுகளை

வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது

நாம் வாழும் உலகில் தான் இவர்களும்

வாழ்கிறார்கள். ...

6 கருத்துகள்:

  1. நகுலனா??!!

    எங்கேயோ போயிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  2. மூன்று கவிதைகள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் நீங்கள் இணைத்துள்ள படத்தையும் சேர்த்து...

    பதிலளிநீக்கு
  3. பிரபாகர், உங்கள் கருத்துரையை ரசித்தேன்.நன்றி .

    பதிலளிநீக்கு
  4. அருமை!அதிலும் 'காத்திருந்தேன்'என்னவோ செய்கிறது!
    இன்னும் சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் ஜீ. நகுலனின் கவிதைகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. நன்றி

    பதிலளிநீக்கு