இணையம் இருப்பதில் தான் எத்தனை வசதி. நாம் என்ன எழுதினாலும் பதிவிடலாம். புதிய முயற்சி செய்து பார்க்கலாம்.
அதைத் தான் இங்கு நான் செய்திருக்கிறேன். ஹைக்கூ கவிதைகள் எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு பேராசை. பார்க்கலாம் எப்படிப் போகிறது என்று. படிப்பவர்களுக்கு மிக்க நன்றி.
*****************************************
நின்று கொண்டேயிருக்கிறது
கேள்விகளுக்கு விடை அறியாமல்
மரம்
**************************************************
தேடுகிறேன்
தொலைத்த காதலை
கடற்கரை மணலில்
*****************************************************
திரும்பப் போகத் தானா
அடித்துக் கொண்டு வருகிறது
அலை
********************************************************
இழந்த பிறகு
இழக்க என்ன இருக்கிறது
தாய்
********************************************************
தூய்மையான தழுவல்
வருடம் தவறாமல் பூமிக்கு
பனிமழை
***********************************************************
நினைவுகளில் மூழ்கிய தாத்தா
பேரென்ன குழந்தே
பத்மஜா
*************************************************************
எல்லோரும் சமம்
வட்டத்தின்
முதற்புள்ளி
****************************************************************
பிரசாதம்
கடவுள் போட்ட
பிச்சை
*****************************************************************
//தூய்மையான தழுவல்
பதிலளிநீக்குவருடம் தவறாமல் பூமிக்கு
பனிமழை//
Nice! :-)
சூப்பர்
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை அதிலும் திரும்பப் போகத் தானா
பதிலளிநீக்குஅடித்துக் கொண்டு வருகிறது
அலை
ஹைக்கு சிறப்பு
மிக்க நன்றிகள் ஜீ, பார்வையாளன் மற்றும் பனித்துளி சங்கர்.
பதிலளிநீக்குஎன் நண்பன் நட்பாஸ் என்கிற பாஸ்கரின் பெயருடைய தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. எனது வலைப் பூவில் என் பார்வையில் பாராட்டி எழுதியிருக்கிறேன். எனது வலைப் பூ www.easytamil.blogspot.com
பதிலளிநீக்குவீரராகவன், இதை நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சி. மிக்க நன்றி தங்கள் ஊக்குவிப்பிற்கு.
பதிலளிநீக்குநட்பாஸ் எனுக்கும் இணையம் மூலம் கிடைத்த ஓர் அருமையான நண்பர்.
உங்கள் உடம்பில் கொஞ்சம் ஹைக்கூ ரத்தமும் ஓடுகிறது. அதனால் நன்றாகவே வந்திருக்கிறது!
பதிலளிநீக்குபாரதி மணி
மணி சார், மிக்க நன்றி. ஒரு பெரிய எழுத்தாளரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டா? நம்ப முடியவில்லை. உங்கள் ஊக்குவித்தலுக்கு மீண்டும் நன்றி.
பதிலளிநீக்கு:-)))
பதிலளிநீக்கு//தேடுகிறேன்
பதிலளிநீக்குதொலைத்த காதலை
கடற்கரை மணலில்//
மனதைத் தொட்டது.
நன்றி சுபத்ரா.
பதிலளிநீக்கு