வெள்ளி, 17 டிசம்பர், 2010

Miroslav Holub - உற்சாகமூட்டும் ஒரு கவிதை


Miroslav Holub செக்கஸ்லோவாகிய நாட்டைச் சேர்ந்த கவிஞர். மேலும் இவர் ஒரு விஞ்ஞானியும் கூட. சுவையான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். கவிதையில் அறிவியல் கலந்தும் எழுதியுள்ளார். அதைப் பிறகு பார்ப்போம். இந்தக் கவிதை ஒரு நம்பிக்கைக் கொடுக்கும் தோரணையிலும், "சும்மா இருப்பதே சுகம்" என்று இருக்காமல் முடிந்த வரை புது முயற்சிகளை செய்யத் தூண்டுவதாகவும், அதனால் இழப்பு இல்லை என்பதையும் கூறும் வகையில் அமைந்துள்ளது. நீங்கள் படிக்கும் போது உங்களுக்குப் பல சிந்தனைகளை கட்டாயம் கொடுக்கும். அதைப் பகிர்ந்து கொள்ளவும்.
இந்தக் கவிதை

போ அந்தக் கதவைத் திற.
பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்
அது போய் விடும்.

என்ற இடத்தில உச்சத்தை அடைகிறது என்று கருதுகிறேன்

அந்தக் கதவுகள்

போ அந்தக் கதவைத் திற.
ஒரு வேளை வெளியில்
ஒரு மரம் , இல்லை ஒரு மரத்துண்டு,
இல்லை ஒரு தோட்டம்
இல்லை ஒரு மந்திர நகரம் இருக்கலாம்.

போ அந்தக் கதவைத் திற.
ஒரு வேளை வெளியில்
சொரிந்து கொண்டிருக்கும் நாய் இருக்கலாம்.
ஒரு வேளை வெளியில் ஒரு முகம்,
இல்லை ஒரு விழி
இல்லை ஒரு சித்திரத்தின்
சித்திரம் இருக்கலாம்.

போ அந்தக் கதவைத் திற.
பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்
அது போய் விடும்.

போ அந்தக் கதவைத் திற.
வெளியில் இருளின் கானம் இருக்கக் கூடும்,
மேலும் வெளியில் ஆழமான காற்றின் மூச்சிருக்கலாம்
இல்லை ஒன்றுமே இல்லாமல் கூட போகலாம்
போ அந்தக் கதவைத் திற.

குறைந்த பட்சம்
காற்றோட்டமாவதுஇருக்கக் கூடும்.




மேலும் இவருடைய சில கவிதைகளின் மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து பார்க்கலாம்.

14 கருத்துகள்:

  1. செய்ங்க சார். ரொம்ப நன்றாக இருக்கிறது.

    ஆனால் கதவைத் திறந்த பின் காற்று வந்தால் பரவாயில்லை, பூதம் கீதம் கிளம்பி விட்டால் என்ன செய்வது? அதுதானே பயமே! :)

    பதிலளிநீக்கு
  2. பூதம் வந்தாலும் பனிமூட்டம் போல் போய்விடும்.கவலை வேண்டாம்...)
    நன்றி நட்பாஸ்.

    பதிலளிநீக்கு