வியாழன், 18 நவம்பர், 2010

Piet Hein - இரண்டு கவிதைகள்


டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிட் ஹீன் (Piet Hein ) ஒரு கணிதவியலாளர்,தத்துவஞானி மற்றும் கவிஞர். அவர் கவிதைகளில் இரண்டு மொழி பெயர்ப்புடன் கீழே. மேலும் படிக்க விருப்பமென்றால் இங்கே கிளிக்கவும்.ஏனோ இவர் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

Parallelism


"Lines that are parallel
meet at Infinity!"
Euclid repeatedly,
heatedly,
urged.
Until he died
and so reaching that vicinity
in it he
found that the damned things diverged.

ஒருவழி இணைவுநிலை


"இணை கோடுகள் சந்திக்கின்றன
முடிவிலியில்!" என யுக்லிட்
மீண்டும் மீண்டும்
தீவிரமாக வலியுறுத்தினார்
அவர் சாகும் வரை.
ஆனால் அதன் அணிமையில்
சென்ற போது கண்டறிந்தார்
சபிக்கப்பட்ட அவைகள்
விலகிச் செல்கின்றன என்று.

Constitutional Point


Power corrupts,
whereas sound opposition
builds up our free
democratic tradition.
One thing would make
a democracy flower:
having a strong opposition-
in power.


அரசியலமைப்பு கருத்து


அதிகாரம் சீரழிக்கிறது,
அதே வேளையில் வலுவான எதிர்ப்பு
கட்டமைக்கிறது நம்முடைய சுதந்திரமான
ஜனநாயக மரபை.
பயனுள்ள காரியம் ஒன்று முடியுமானால்
ஒரு ஜனநாயகத்தை மலர வைக்க:
வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்தால்-
ஆட்சி பீடத்தில்.

என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தாலோ அல்லது நல்ல மொழிபெயர்ப்பு கொடுக்க முடிந்தாலோ தவறாமல் மறு மொழியில் குறிப்பிடவும். நன்றி.

2 கருத்துகள்:

  1. urged என்பதை வலியுறுத்தினார் என்றும் damned things என்பதை நாசமாய்ப் போனதுகள் என்றும் மொழிபெயர்த்திருக்கலாம். அதே போல் இரண்டாவது கவிதையில் corrupts என்பதை சீரழிக்கிறது என்று சொல்லலாம், இல்லையா?

    பொதுவாக நீங்கள் கொடுத்திருக்கிற ஆங்கில கவிதைகளில் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கிறது, தமிழில் அது கொண்டு வரப்படவில்லை என்று நினைக்கிறேன்.

    நீங்கள் இவரது இன்னும் பல கவிதைகளை மொழி பெயர்த்தால் நமக்கு பிட் ஹீன் படிப்பதற்கு உதவியாக இருக்கும்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நட்பாஸ். இரண்டு இடங்களில் நீங்கள் கூறியதைத் திருத்தி உள்ளேன்.
    எனக்கும் மொழிபெயர்ப்பு திருப்தியாக இல்லை. குறிப்பாக இரண்டாவது கவிதையில். போகப் போக சரியாகும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு