ஞாயிறு, 28 நவம்பர், 2010

தொலைத்த தலைமுறை - வித்தியாசமான கவிதை


ஜோனதன் ரீட் (Jonathan Reed) என்கிற ஒரு பல்கலைக் கழக மாணவர் எழுதிய ஒரு ரசிக்கத்தக்க கவிதை இதன் சிறப்பு என்னவென்றால் கிட்டத்தட்ட இது ஒரு முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் (palindrome) எனலாம். இதை மேலிருந்து கீழே படித்தால் ஒரு பொருளும், தலை கீழாக படித்தால் தலை கீழான பொருள் கிடைக்கிறது. இதைப் படித்து விட்டு நீங்கள் நம்பிக்கையானவரா இல்லை நம்பிக்கை அற்றவரா என்றும் எந்த தலை முறையைச் சேர்த்தவர் என்றும் கூறுங்களேன்.

முதலில் என் தமிழ் மொழி பெயர்ப்பு. பிறகு இதனுடைய ஆங்கில மூல வடிவம்

தொலைத்த தலைமுறை

நான் ஒரு தொலைத்த தலைமுறையின் அங்கம் என

நம்ப மறுக்கிறேன்.

இந்த உலகை என்னால் மாற்றி அமைக்க முடியும்

இதை ஓர் அதிர்ச்சியாக உணர்கிறேன் ஆனால்

"சந்தோசம் உள்ளிருந்து வருகிறது."

என்பது ஒரு பொய், மேலும்

"பணம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்"

அதனால் முப்பது வருடங்களில் என் குழந்தைகளிடம் கூறுவேன்

என் வாழ்க்கையில் அவர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள் இல்லை என்று

என் வேலை அமர்த்துநர்களுக்குக் கூடத் தெரியும்

என்னுடைய முன்னுரிமைகள் நேர்மையானது அதனால்

வேலை

முக்கியமானது அதை விட முக்கியமானது இல்லை

குடும்பம்

நான் உங்களுக்கு சொல்கிறேன்

ஒரு காலத்தில்

குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன

ஆனால் என் காலத்தில் இது உண்மையாக இருக்கப் போவதில்லை

இது ஓர் அவசரத்தில் ஒட்டி வைக்கப்பட்ட சமூகமென

வல்லுனர்கள் சொல்கிறார்கள்

இப்போதிலிருந்து 30 வருடத்தில், நான் என்னுடைய 10 வது திருமண முறிவு நாளைகொண்டாடிக் கொண்டிருப்பேன் என்று

நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்

நான் என்னால் உருவாக்கப்பட்ட நாட்டில் வாழ்வேன்

எதிர் காலத்தில்

சுற்றுப்புற நாசம் ஒரு நெறிமிறையாகும் என

இனி எப்போதும் சொல்ல முடியக் கூடியதில்லை

என்னை ஒத்தவர்களும் நானும் புவியின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்று

அது தெளிவாகத் தெரியும்

என்னுடைய தலைமுறை ஒரு விளக்கஇயலா அசட்டை மனப்பான்மையுள்ள ஒன்று என்று

அதை ஊகிப்பது முட்டாள்தனமானது

நம்பிக்கை இருக்கிறது.


Lost Generation by Jonathan Reed

I am part of a lost generation
and I refuse to believe that
I can change the world
I realize this may be a shock but
“Happiness comes from within.”
is a lie, and
“Money will make me happy.”
So in 30 years I will tell my children
they are not the most important thing in my life
My employer will know that
I have my priorities straight because
work
is more important than
family
I tell you this
Once upon a time
Families stayed together
but this will not be true in my era
This is a quick fix society
Experts tell me
30 years from now, I will be celebrating the 10th anniversary of my divorce
I do not concede that
I will live in a country of my own making
In the future
Environmental destruction will be the norm
No longer can it be said that
My peers and I care about this earth
It will be evident that
My generation is apathetic and lethargic
It is foolish to presume that
There is hope.
இதனுடைய காணொளி (video) இங்கு பார்க்க கிடைக்கிறது.

6 கருத்துகள்:

 1. அருமையான பதிவு- மிக்க நன்றி. ஒரு கோணத்தில் பார்த்தால் விரக்தியும் மறு கோணத்தில் பார்த்தால் நம்பிக்கையும் தருவதாக இருக்கிறது வாழ்க்கை. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? இரண்டுமே சாத்தியம்தான்- அதை ஒரே கவிதையில் அழகாக/ வித்தியாசமாக எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்! வாழ்க்கையில் சத்தியமான இரண்டு துருவங்களையும் ஓரே கவிதையில்!
  நன்றி! வாழ்த்துக்கள்! :-)

  பதிலளிநீக்கு
 3. நன்றி நட்பாஸ்.காலத்தின் தீர்ப்பே அதிசியமானது. ஆமாம். ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

  பதிலளிநீக்கு
 4. நண்பரே... இதை எல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானமும் ஆங்கில அறிவும் இல்லை... ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
 5. பிரபாகரன், நன்றி. என் தமிழ் மொழிபெயர்ப்பும் புரிகிற மாதிரி இல்லையா?

  பதிலளிநீக்கு