வெள்ளி, 19 நவம்பர், 2010
இளைப்பாற கொஞ்சம் கணிதமும் புதிரும்
புதிர் 1: அண்ணாச்சிக்கு மூன்று மகன்கள். அவருக்கு நெல்லையில் சொத்தாக சொந்தமாக 17 வீடுகள். அவருடைய உயிலில் சொத்தில் மூத்த மகனுக்கு 1 /2 பங்கும், இரண்டாவது மகனுக்கு 1 /3 பங்கும் மற்றும் மூன்றாவது மகனுக்கு 1 /9 பங்கும் கொடுப்பதாக எழுதி வைத்தார். முழு வீடுகளாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை. மகன்களுக்கு ஒரே குழப்பம். அப்பாவிற்கு இருந்த கணித அறிவு நமக்கு இல்லையே என்று.உங்களைக் கூப்பிட்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னால் எப்படி தீர்த்து வைப்பீர்கள்?
புதிர் 2: முப்பது ஆடுகளும், முப்பது மாடுகளும் ஒரு புல்வெளி மைதானத்தை மேய்ந்து முடிக்க 60 நாட்கள் ஆகிறது.
அதே மைதானத்தை எழுபது மாடுகளும், எழுபது ஆடுகளும் மேய 24 நாட்கள் பிடிக்கிறது. ஒவ்வொரு நாளும் புற்கள் ஒரே மாதிரி அளவில் வளருகிறது. அதே புல்வெளியை 96 நாட்களில் மேய்ந்து முடிக்க எத்தனை ஆடுகளும், மாடுகளும் தேவைப்படுகின்றன?
Labels:
கணிதப் புதிர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னோட வீடு ஒண்ணை சேர்த்து 18 வீடாக்குவேன்
பதிலளிநீக்குமொதோ பையனுக்கு 9 வீடுகள், இரண்டாமவனுக்கு 6 வீடுகள், மூன்றாமவனுக்கு 2 வீடுகள் கொடுத்துட்டு என்னோட வீட்டை திரும்ப எடுத்துக்குவேன்
ரெண்டாவது கேள்வியையாவது வேறு ஒருத்தருக்கு விட்டுக் கொடுக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி பாஸ்டன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குமொதக் கணக்கு - சிம்பிள் - காலாகாலமாக - 17 யானைய 3 பேருக்குப் பிரிச்சுக் கொடுத்தானே ராஜா - எப்படி தன் யானையினையும் சேத்து 18 ஆக்கி - பிரிச்சுக் கொடுத்துட்டு - தன் யனையையும் எடுத்துக் கொண்டானே - அநதக் கணக்கு தானே ! புதுசா கண்டு பிடிச்ச மாதிரி சொல்லி ருக்கணூமா என்ன ? - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு9+ 6 + 2 = 17
பதிலளிநீக்குAM I CORRECT?
முப்பது ஆடுகளும், முப்பது மாடுகளும் ஒரு புல்வெளி மைதானத்தை மேய்ந்து முடிக்க 60 நாட்கள் ஆகிறது.
பதிலளிநீக்குஅதே மைதானத்தை எழுபது மாடுகளும், எழுபது ஆடுகளும் மேய 24 நாட்கள் பிடிக்கிறது. ஒவ்வொரு நாளும் புற்கள் ஒரே மாதிரி அளவில் வளருகிறது. அதே புல்வெளியை 96 நாட்களில் மேய்ந்து முடிக்க எத்தனை ஆடுகளும், மாடுகளும் தேவைப்படுகின்றன? answer please
20 நாட்கள்
பதிலளிநீக்கு