வெள்ளி, 3 ஏப்ரல், 2009

இந்த வாரக் கணக்கு - 7


கனசதுரத்திற்கு 6 முகங்கள் (faces of cube) இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அறுபத்தி நான்கு 1X1X1 அளவு கொண்ட கனசதுரங்களை பசையினால் ஒட்டி (glued) 4X4X4 என்ற அளவு கொண்ட பெரிய கனசதுரம் உண்டாக்கப்பட்டது.

இப்படி பெரிய கனசதுரம் செய்த போது எத்தனை ஜோடி 1X1X1 கனசதுரங்களின் முகங்கள் (faces) ஒன்றோடொன்று ஒட்டப்பட்டன?

5 கருத்துகள்:

  1. எனது யூகம் = 288...

    உங்கள் தளம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் மணம் போல tamilish.com லும் பதியுங்கள்.. அங்கிருந்தும் நிறைய பேர் வருவார்கள்..

    எனது அறிவுக்கு உங்கள் கணக்குகள் சற்று சிரமமாக உள்ளது.. சிறிது எளிமையாக்கி, விடை குறித்த குறிப்புகள் (க்ளு) கொடுத்தால் வசதி..

    பதிலளிநீக்கு
  2. நன்றி லோகு.முதலில் இரண்டு சிறிய கனசதுரத்தை சேர்க்கப் பாருங்கள்.பின் நான்கு மற்றும் பதினாறு கனசதுரங்களை ஒன்று சேருங்கள்.இறுதியாக நான்கு பதினாறு கனசதுரங்களையும் சேர்த்தால் 4X4X4 கனசதுரம் கிடைக்கப் பெறலாம்.
    tamilish.com முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு 1 x 1 x 1 கன சதுரத்திற்கும் 6 முகங்கள் எனவே 64 கன சதுரங்களுக்கு 64 x 6 = 384. அவற்றில் வெளியே நம் பார்வைக்குத் தெரியும் முகங்களின் எண்ணிக்கை 4 x 4 x 6 = 96. எனவே மீதி நம் பார்வைக்குத் தெரியாத ஒட்டப்பட்டிருக்கும் முகங்கள் = 384 - 96 = 288 (லோகு அவர்களின் யூகம் சரிதான்)
    :-)

    பதிலளிநீக்கு
  4. பாலராஜன் கீதா
    நீங்களும் லோகுவும் 288 முகங்கள் என்று கூறுகிறீர்கள்.ஆனால் எத்தனை ஜோடி முகங்கள் ஒட்டப்பட்டுள்ளது என்பது தான் கேள்வி.அதனால் விடை 144.
    ஒரு வேளை நான் தமிழில் இன்னும் சற்று தெளிவாக எழுதி இருக்கலாம்.
    உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.

    வெங்கடேசன்,

    முயற்சி செய்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு