ரஜினியின் படங்களை கல்லூரியில் படிக்கும் நாட்களில் தவறாமல் பார்ப்பது வழக்கம். ரஜினி நடித்த முதல் 50 லிருந்து 60 படங்கள் வரை அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தது. அதற்கு பிறகு தான் அவர் ஒரு "விற்பனைப் புள்ளியாக" மாற்றப்பட்டார். ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்று எங்கேயோ கேட்ட குரல். S.P. முத்துராமன் இயக்கியப் படங்களில் முற்றிலும் வித்தியாசமான ஒன்று.
இந்த படத்தில் வில்லன் என்ற ஒரு வஸ்துவே இல்லை. எல்லோரும் நல்லவர்களே. சில இடங்களில் அசல் தமிழ் சினிமாத்தனம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை நுணுக்கமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ரஜினியை பிடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்அம்பிகா. .அம்பிகாவின் முதிர்ச்சியில்லாத எண்ணங்கள் அவரை தவறான முடிவுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் அதை உணரும் போது காலம் கடந்து விடுகிறது. இறுதியில் ரஜினி அம்பிகாவை மன்னிக்கும் முடிவுக்கு வருகிறார். எண்பதுகளில் இது ஒரு முற்போக்கான முடிவு என்பதில் சந்தேகமில்லை.
ரஜினி, அம்பிகா மற்றும் ராதாவின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும். பல சினிமாக்கள் அன்று பார்த்தது இன்று பிடிப்பதில்லை.பல கதைகள் அன்று படித்தது இன்று பாதிக்கு மேல் இன்று படிக்க முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இன்று பார்க்கும் போதும் இந்த சினிமா எனக்கு பிடித்திருந்தது. ரஜினிக்கு இது போல் ஒரு வேடம் மீண்டும் கிடைக்குமா?

ரஜினியின் வித்தியாசமான படங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
நல்ல ரசனைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅப்படியே முள்ளும் மலரும், ஜானி, தில்லு முல்லு, அபூர்வ ராகங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com