வயதாகி ஓய்வு பெறும் காலத்தை எதிர் நோக்கி வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது. பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக காலம் கழிக்கலாம். தீர்த்த யாத்திரை சென்று வரலாம். பொருள் ஈட்டுவது மட்டும் வாழ்க்கை இல்லை என்ற நிலை.மனித நேயம் உறவாடிக் கொண்டிருந்த காலம் .ஆனால் இன்று ஒய்வு காலம் என்பது பலருக்கும் ஒரு பயத்துடன் கூடிய நம்பிக்கையற்ற தெளிவில்லாத மனச் சித்திரத்துடன் அணுக வேண்டியதாகி விட்டது. இன்று வயதானவர்கள் அவர்களின் பெற்றோர்களை முதுமையில் இறுதி வரை நன்கு பராமரித்து வழி அனுப்பி வைத்தார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு அந்த உத்திரவாதம் இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதற்கு எடுத்துக் காட்டாக பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற 60 வயது மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு நேர்காணல் சிறந்த உதாரணம். காலச் சக்கரத்தில்ஏற்படும் சமுதாய மாற்றம். தவிர்க்க முடியாதது. இன்றுள்ள அவசர மற்றும் பொருள் ஈட்டும் குறிக்கோளுடன் மட்டும் வாழும் சமுதாயத்தில், அவரவர்கள் தங்கள் வாழ்கையை தாங்களே ஓடி முடிக்க வேண்டிய நிலை. மனிதன் வாழும் முறையில் மாற்றம் தேவைப்படுகிறது.
இதில் அசோகமித்திரன் எங்கிருந்து வந்தார்? அவர் காலச்சுவடில் எழுதிய கட்டுரை மிகவும் மனதைத் தொடுவதாக இருந்தது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மன வேதனையை ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக படம் பிடித்ததோடு, வயோதிக மனநிலை மற்றும் சிக்கல்களையும்
உணர்ச்சியுடன் தொட்டுச் சென்றுள்ளார். அதன் இணைப்பு இங்கே. படித்துப் பார்க்கவும்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு பிரச்சனைகள். மனித சமுதாயம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது?
வயோதிகம் அசோகமித்திரன்

பதிலளிநீக்குஆம் எனக்குள்ளும் சமூகம்
முன்னேறிக்கொண்டா இருக்கிறது
என்ற கேள்வி எழுந்து நிற்கிறது
சிந்தனையைக் கிளாறிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆம் ரமணி. நாம் அறியாமலே சமுதாய மாற்றங்கள் நம்மை வந்தடைகின்றன. அதற்கு நாம் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கருத்துரைக்கு நன்றி.
நீக்குஓய்வுகாலத்துக்கு வேண்டிய நிதியை, இப்பவே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்சுக்கணும் என்பது முக்கியம். ஆனால் சேர்த்ததை ஃபண்ட் மேனேஜ்மெண்டில் போட்டு மொத்தத்தையும் கோட்டைவிடாமல் இருக்கவேண்டியது அதைவிட முக்கியம். (இதைப்பற்றிச் சொல்ல நிறையவே இருக்கு)
பதிலளிநீக்குநம்முடைய காலத்துக்கு அப்புறம்தான் வாரிசுகளுக்கு சொத்து உரிமை போகணுமுன்னு உயில் எழுதி அதை பதிவு செஞ்சு வைப்பது அதைவிட ரொம்பவே முக்கியம்.
துளசி கோபால் நீங்கள் சொல்வது பணம் இருப்பவர்களுக்கு. பணம் போதும், போதாது என இருப்பவர்களுக்கு சமூகத்தில் முன்பிருந்த பாதுகாப்பு இப்போதில்லை என நினைக்கிறன். உங்கள் கருத்துக்கு நன்றி.
நீக்கு