திங்கள், 17 மே, 2010

இந்த வாரக் கணக்கு - 25


நவீன் 3 செமீ, 4 செமீ மற்றும் 6 செமீ அளவுகள் கொண்ட குச்சிகளை வைத்து ஓர் அழகான முக்கோணம் செய்தான். ஆனால் குச்சியின் அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 7 செமீ இருந்த போது முக்கோணம் அமையாமல் திடுக்கிட்டான். பிறகு அதன் காரணத்தை உணர்ந்தான்.சிறிது நாட்களுக்குப் பிறகு பதினோரு குச்சிகளை செய்தான்.அதில் எந்த மூன்று குச்சிகளை எடுத்து முக்கோணம் அமைக்க முயன்றாலும் அது முடியவே இல்லை. அவனிடம் இருந்த இந்த 11 குச்சிகளில், 11 வது குச்சியின் மிகச் சிறிய அளவு என்னவாக இருக்கும்?

6 கருத்துகள்:

 1. திரு பாஸ்கர் அவர்களுக்கு..
  எதேச்சையாக இன்று உங்கள் வலைத்தளத்துக்கு வர நேர்ந்தது. மிகவும் அருமையான கலவையாக, சிறப்பாக உள்ளது. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கணிதம் கற்றுத்தருவதற்கு ஏற்றது போல இடுகைகள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நேரமிருப்பின் என்னுடைய வலைத்தளங்களுக்கும் சென்று பாருங்கள்.
  http://baski-reviews.blogspot.com
  http://baski-lounge.blogspot.com
  நன்றி -- பாஸ்கி

  பதிலளிநீக்கு
 2. The Triangle Inequality : Three lengths form a triangle if and only if the sum of the lengths of any two of the three is greater than the third length. Equivalently as a single test, three lengths determine a triangle if and only if the sum of the two shortest lengths is longer than the longest of the sides.

  Assume the 11 sticks' lengths as a1,a2,a3,a4,a5,a6,a7,a8,a9,a10,a11.

  He was not able to form a triangle. Starting from the possible small integer 1, we can find the length of the next stick by adding two previous lengths.

  So the stick Lengths: 1 1 2 3 5 8 13 21 34 55 89

  பதிலளிநீக்கு
 3. நன்றி லோகு. அழகான விளக்கம். சரியான விடை.

  நன்றி,
  பாஸ்கர்.

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள பாஸ்கர்,

  இவற்றை நாங்கள் ஃபிபனாக்கி எண்கள் (Fibonacci numbers) என்ற தலைப்பில் படித்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. பாலராஜன் கீதா மிக்க நன்றி. இந்த கணக்கே பிபோனக்கி (Fibonacci) தொடரை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. clayhorse என் தளத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி. ஆறு வயது குழந்தைகளுக்கு எப்படி எழுதுவது என்று யோசிக்க வேண்டும். 8 வயது குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லிக் கொடுக்காத கணக்குகளை பற்றி எழுதலாம். அதற்கு குறைந்தது 10 அல்லது 15 குழந்தைகள் ஆர்வம் காட்டினால் நிச்சயம் செய்ய முடியும்.
  தங்கள் தளம் மிகவும் அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு