புதன், 7 ஆகஸ்ட், 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகச் சிறுகதைகள் - 2

இந்தக் கதைகள் அனைத்தையும் ஒரு புத்தகமாகப் போடப் போவதாக ஜெமோ கூறியுள்ளார். நல்ல விஷயம். ஆனால் ஏன் இந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.. அவர் முன்பு கொடுத்த நூறு சிறந்த கதைகளுக்குக் கையாண்ட ​அதே அளவுகோள் இல்லை எனத் தெரிகிறது.​புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அணுக அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை ​இருக்கவும் கூடாது என நினைக்கிறேன்.​ ​புத்தகத்தில் தன் தர நிர்ணய அளவீடுகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.

ராஜகோபாலன் எழுதிய வாயுக் கோளாறு மற்றும் கன்னிப்படையல் கதைகளைப் பார்ப்போம். முதலில் நெல்லைத் தமிழ் அழகு. சிறிது நேரம் ஊருக்குச் சென்று வந்தது போன்ற அனுபவம். வாயுக் கோளாறு நகைச்சுவையாக எழுதியுள்ளார். மற்றபடி கதையில் பெரிய விஷயம் இல்லை. பலருக்கும் தன் பெற்றோருக்கு இருந்த நோய் தனக்கும் வந்துவிடுமோ ​,​ அதனால் ​​ ​​தான் துன்பம் அனுபவிக்க நேரமோ என்ற எண்ணம் இருக்கும். அது ​மரண பயமல்ல. ஆனால் எப்போதும் அந்த எண்ணத்தைச் சுமந்துகொண்டு இருப்பது​?​ அதைத்தான் இந்தக் கதை சொல்கிறது. இது ஒரு கதையா அல்லது சம்பவங்களின் தொகுப்பா? நெல்லை தமிழ் தவிர இதைப் படிக்க எந்த முகாந்திரமும் இல்லை ஜெமோ சிபா​​ ​​ரிசைத் தவிர.

கன்னிப்படையல் – அறம் சார்ந்த விழுமியங்களுக்கும், சட்டத்தின் பார்வையில் குற்றம் என்று நிரூபிக்க முடியுமா முடியாதா ​ ​ என்ற கேள்விக்குமிடையேயா​ன போராட்டமாகத்தான் போகிறது. கதை ஆரம்பத்தில் வரும் இந்த வரிகள் இதைச் சுட்டிக் காட்டுகின்​றன.​

“ஆக உமக்கு அவனுவ வெளியே திரியுததுதாம் ஆத்தாமையா இருக்கு. அவனுவள உள்ள தூக்கி வச்சுட்டா நீரு எங்க வெசாரணய ஏத்துக்கிடுவீரு … அப்படித்தான?”
கணேசன் நீருக்குள் தலை அமிழ்த்தப்பட்டவராய் திணறினார். -”சார் ! அய்யா! அது அப்படி இல்லங்க .. தப்பு பண்ணுனது அவனுவளாச்சே …
“அத கோர்ட்டுல்லாவே சொல்லணும். ஒமக்கு இப்ப என்ன? வெசாரனதான ? நடத்திருவோம் .. உம்மட்ட இருந்தே ஆரம்பிப்போம் . என்ன ரைட்டரே, வெசாரனைய ஆரம்பியும் ..”
கடைசி வரை கணேசன் இதே நிலையைத் தான் கொண்டிருக்கிறார்.

 ராதாகிருஷ்ணன் பாத்திரம் மிக முக்கியமானது.

“நியாயத்தின் அணுகுமுறை ஒன்றுதான்.​ ​எவர் பலம் படைத்தவரோ அவருக்கேத்தான் நியாயம். ​ ​ஏனெனில் அரசாங்கம் பலமுள்ளவர்களால்தான் ​உருவா​க்கப்படுகிறது. ​ ​நாடும் அவர்களால்தான் ஏதோ ஒரு முறையில் ஆளப்படுகிறது” என்று ப்ளாட்டோ​ ​​ ரிபப்ளிக் புத்தகம் ஒன்றில் என்றோ எழுதி வைத்ததை​ எதிரொலிக்கும் கதை இது.​ . 
இது காலம்காலமாக நடந்துவரும் கொடுமைதான். இந்த இடத்தில் கதை உச்சத்தை​த்​ தொட்டுவிட்டது. கதாசிரியரும் இதுவரை மிக நன்றாக எழுதியுள்ளார். ஆனால் iபி​ ​​ன்னர் ​ கன்னி, கற்பு , படையல் என்று நீர்த்துப் போகச் செய்து விட்டார். நல்லாத்தானே போய்கிட்டிருந்தது என சொல்ல வைத்துவிட்டது. வெண்ணை திரண்டு வரும்போது தாழி​ ​ உடைந்தாற்போல். மன்னார்குடி சுவாமியே இப்படி செய்து விட்டாr​ரே​​!​ . ஆனால் அவர் கதை​,​​ ​ அவர் முடிவு. இந்தக் கடைசி பகுதி இல்லையெனில் iஇது ​மிகச் சிறந்த கதையாகியிருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்ததாக சுநீல் கிருஷ்ணன் எழுதிய வாசுதேவன். இந்தக் கதையிலும் டாக்டர்​ ​- ​ ​நோயாளி சிக்கல். ஒரு நோயாளிக்கு ஒரு விழுக்காடு பிழைக்கும் நம்பிக்கை இருப்பினும், மருத்துவர் அவருக்கு​ச்​ ​ சிகிச்சைக் கொடுக்க வேண்டுமா? மருத்துவர் முடியாது என்றாலும் அதற்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறதா? எந்த மருத்துவ முறை சிறந்தது? iஇ​து ​ போன்ற கேள்விகள் இந்தக் கதையின் மூலம் எழுகி​ன்றன​. அது எதற்கும் ஒரு பதிலை​​ காத்திரமாக, ஒரு தரிசனம் கிடைக்கும்படி ​சொல்ல​வில்லை. தாங்கள் பயிற்சி எடுக்கும்  மருத்துவர் நோயாளியை ​ ​பணத்திற்காக ஏமாற்றுகிறார் என நினைக்கிறார்கள். அதை “எத்​தைத் தின்னால் பித்தம் தெளியும்” என்றி ரு​க்கும் பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் இளங்கோவும் அவன் நண்பனும் தவிக்கிறார்கள். வெறுமனே உயிரோடு இருந்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 

“பிணத்துக்கெல்லாம் வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கிறது” என்ற வரி முகத்தில் அறைந்தாற் போல் இருக்கிறது. வைத்தியம் பார்ப்பதால் நோயாளி மேல் ஒருவித பற்று உண்டாகிறது. அந்தக் கரிசனம் உண்மையைச் சொல்ல வைக்கிறது. கதையில் நடை நன்றாக வந்துள்ளது. ஆனால் பூடகமாகக்கூட கதாசிரியர் என்ன சொல்ல முயல்கிறார் எனப் புரியவில்லை. ஏதோ அவசரத்தில் ஒரு அனுபவத்தைக் கதையாக மாற்ற முயன்றது போல் உள்ளது. அது நிச்சயம் முழுமை பெறவில்லை. கதை தொடக்கத்தில் இருந்த நிதானம் இறுதியில் இல்லாமல் போகிறது. ஜெமோ வாடை இருந்தாலும், எல்லோர் எழுத்தை விட இவருடையது எனக்குப் பிடித்திருந்தது. 

கடைசி இரண்டு தெலுங்கு வரிகளை தமிழ் படுத்துவோம்.

“யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா”  -- “எதுக்குடி இப்படி செய்யற ...அடி வேணுமா”.


“ஊரிக்க தா” – “ சும்மா தா”

3 கருத்துகள்:

  1. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி சார்..இது அனுபவம் தான் ஆனால் அனுபவப் பகிர்வு இல்லை..நான் சொல்ல வந்தது சரியாக convey ஆகவில்லையா என்னவோ..ஆகட்டும் ..மேம்படுத்திக்கொள்ள உதவும்..

    பதிலளிநீக்கு
  2. சுனீல் நீங்கள் சிறிது விரக்தியுடன் எதிர்வினை செய்துள்ளது போல் இருக்கிறது. இது என் தனிப்பட்டக் கருத்து. ஆனால் இந்தக் கதை பல வாசகர்களைக் கண்டடைந்துள்ளது என ஜெமோ தளத்தில் வரும் எதிர்வினைகளில் இருந்து தெரிகிறது. மேலும் நீங்கள் மிகவும் மதிக்கும் ஜெமோ சிபாரிசு செய்துள்ளார். வேறு என்ன வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பாஸ்கர் லக்ஷ்மன் சார்,
    ஆரம்ப எழுத்தாளராக நாம் சொல்ல வந்தது சரியாக போய் சேருகிறதா என்பது குறித்து சற்று ஐயம் இருப்பது இயல்பே. இந்த ஏமாற்றம் நாம் சொல்ல நினைத்தது சரியாக போய் சேரவில்லையோ எனும் ஐயம் தான். critical ஆக விமர்சனம் வருவது மிக முக்கியம், அது வளர்ச்சிக்கு உதவும். அதை நீங்களும் நட்பாசும் செய்து வந்துள்ளீர்கள். விரக்தி எல்லாம் ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு