புதன், 12 செப்டம்பர், 2012

நயாகராவும் குற்றாலமும்


கனடா பகுதியில் இலாடம் வடிவில் இருக்கும் நயாகரா நீர்விழ்ச்சியின் அழகே அழகு. இயற்கையின் உயர்ந்த வரப் பிரசாதம். 173 அடி உயரத்திலிருந்து அடர்த்தியாக விழும் நீரைப் பார்க்கும் போது ஏற்படும் ஆச்சிரியம் அலாதியானது. சமீபத்தில் அமெரிக்க பகுதியில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு  கிடைத்தது.











பயணப் படகில் நீர்விழ்ச்சியின் அருகில் செல்லும் சமயம், தண்ணீர் தெளிக்கும் சுகம் எழுத்தில் வடிக்க முடியாது. நயாகராவில் பல இந்தியர்களைப் பார்க்க முடியும். நானும் சென்னை தான். மந்தவெளி. நா பல்லாவரம். பெங்களுரு. பாம்பே என்று ஒரு மினி  பாரத விலாஸ்  வாழ் நாள் முழுது உழைத்து பெண்ணையோ, பையனையோ பொறியியல் படிக்க வைத்து டாலர் தேசம் அனுப்பி தங்கள் கடமையை நன்கு செய்து விட்டோம் என்ற பெருமிதம் பல பெற்றோர்களின் முகங்களில். முக்கால் வாசி பெண்ணிற்கு குழந்தை பேறு இல்லை மகனுக்கு இப்போது தான் குழந்தை பிறந்தது என்பதைக் கேட்கலாம். கடந்த 15 வருடத்தில் தான்  எத்தனை மாற்றங்கள்.

நயாகரா செல்லும் போது குற்றாலம் நினைவில் வராமல் போகாது. என்னடா நயாகராவைப் போய் குற்றலத்துடன் ஒபபிடுகிறானே என நினைக்கலாம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.திருநெல்வேலி வாசம், தவறாமல் வருடா வருடம் செல்வதுடுண்டு. அது ஒரு காலம். அதிகாலை கிளம்பி ஒரு எட்டு மணி வாக்கில் குற்றாலம் சென்றடையலாம்.  இதமான தென்றல். காலை பசி. குற்றால ஓட்டலில் நல்ல அருமையான தோசை, இட்லி, வடை, பூரி என பல வித டிபன் வகைகள். வயிறார உண்டு, அருவியில் குளிக்கச் செல்வது ஒரு மறக்க முடியாத அனுபவம்.



அதிலும் குற்றாலத்தில் அந்த எண்ணை தேய்த்து மசாஜ் செய்து கொண்டு குளித்து வந்தால், மீண்டும் பசி தலை தூக்கும். மதிய உணவு அருந்தி விட்டு ஊர் திரும்பி வர பேருந்தில் ஏறி அமர்ந்தால், திருநெல்வேலி ஜங்ஷன் வந்து தான் உறக்கத்திலிருந்து கண் விழிக்கும்.அதெல்லோம் ஒரு கனாக்  காலம். அக்கறைக்கு இக்கரை பச்சை. சரி.  நயாகரா படங்கள் சிலதை பகிர்ந்து இருக்கிறேன்.

4 கருத்துகள்:

  1. நயாகரா குற்றாலம் போல மலைப்பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்த்து அப்படி இல்லாதது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் குலவுசனப்பிரியன். நயாகரா அழுகு என்றால், குற்றாலம் அழகும், ஆனந்தமும் சேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  3. குற்றாலம் வருடம் இருமுறை செல்வதுண்டு... இந்த முறை சீசனில் தண்ணீர் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீசன் அப்ப தண்ணியே இல்லை என்றறிய வருத்தமாக உள்ளது.

      நீக்கு