வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஓர் ஆசிரியரின் நினைவாக....

ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திலும்,உயர்விலும் எத்தனையோ சக மனிதர்களின் பங்கு நிச்சியம் இருக்கும்.அதை உணர்ந்து அந்த மனிதர்களின் நினைவில் காலச் சக்கரத்தை பின் தள்ளிப் பார்த்தால் அதில் கிடைக்கும் உவகைக்கு அளவே இல்லை எனலாம். என் வாழ்க்கை பயணத்தில் அப்படி மறக்க முடியாத எத்தனையோ மனிதர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அந்த வகையில் ஆசிரியர் தினத்தை ஒட்டி என் ஆசிரியர் ஒருவரின் நினைவாக இந்த இடுகை.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பில் கணிதம்,இயற்பியல்,வேதியல் போன்ற ஏதாவது ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும். கணிதம் என்றால் இங்கு "அல்ஜீப்ரா ஜாமெட்ரி". ஏதோ காரணத்தினால் அந்த காலத்தில் கணிதம் விருப்பப் பாடமாக எடுப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற தவறான எண்ணம் இருந்தது.அது மாணவர்களுக்கும்,பெற்றோருக்கும் பொருந்தும. நல்ல வேளை இன்று அப்படி இல்லை. அந்த தவறான எண்ணத்தினால் அல்ஜீப்ரா ஜாமெட்ரி விருப்பப் பாட வகுப்பில் முதல் நாள் குறைந்தது 65 மாணவர்கள் வந்தமர்ந்தார்கள்.வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் எல்லோரையும் நோட்டம் விட்டுக் கொண்டே நேரே கரும்பலகையை நோக்கிச் சென்றார். x,y,a,b அது இது என்று அந்த வகுப்பு முடியும் வரை பின்னி எடுத்து விட்டார்."ஏலே இந்த சார்வாள் கொளப்புதார்லே" என்று சில மாணவர்கள் வேறு விருப்பப் பாடத்தை சென்றடைந்தார்கள்.அடுத்த நாளும் இந்த கதை தொடர இறுதியில் 35 மாணவர்கள் தான் கணிதப் பாடத்தில் எஞ்சி நின்றனர்.

அந்த இரண்டு நாளைக்குப் பிறகு அவர் பாடம் நடத்திய விதம் மிக ரசிக்கத் தக்கதாக இருந்தது."எழுத்து அறிவித்தவன் இறைவன்" என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.அவர் கற்பித்த எத்தனையோ கணித நுணுக்கங்கள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. தினமும் வீட்டுப் பாடம் (Home work) கொடுத்து அதனை சரி பார்த்து, மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வகுப்பை நடத்திச் சென்ற விதம் இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.நான் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருப்பதற்கு இந்த ஆசிரியரின் பங்கு மகத்தானது.அவருக்கு இந்த இடுகையை மனமார சமர்பிக்கிறேன்.நான் பாளையம்கோட்டையில் உள்ள தூய யோவான் (St.John's) உயர் நிலைப் பள்ளியில் படித்தேன்.அந்த நல்லாசிரியர் பெயர் திரு.ஆசீர்வாதம்.மனைவி கிடைப்பது மட்டும் இறைவன் கொடுத்த வரமில்லை, நல்ல ஆசிரியர் கிடைப்பதும் இறைவனின் வரம் தான். இந்த இடுகையைப் படிக்கும் போது உங்களின் ஆசிரியர் நினைவு வருவது தவிர்க்க முடியாதது.

10 கருத்துகள்:

 1. கணிதத்தை எல்லோருக்கும் பிடித்த மாதிரி - புரிகிற மாதிரி எடுப்பது சுலபம் இல்லை...ஆசிரியர் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்

  பதிலளிநீக்கு
 3. கணிதம், ஆர்வத்தோடு கற்றால் கற்கண்டு.. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. its realy true "asiriyar kidaipadhellam iraivan kodutha varam" ungalukku kadachamadhiri oru vathiyar yeanakku kidachiruntha iyya indru nan our periya ala vanthuruppean kandippa andha asiriyarudaya pani maen mealum sirakka valthugearean by sila ketta asiriyaral (perambalur hans rover sekar vathiyar)pathikka patta oru manavan

  பதிலளிநீக்கு
 5. அந்த இரண்டு நாளைக்குப் பிறகு அவர் பாடம் நடத்திய விதம் மிக ரசிக்கத் தக்கதாக இருந்தது."எழுத்து அறிவித்தவன் இறைவன்" என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.அவர் கற்பித்த எத்தனையோ கணித நுணுக்கங்கள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. தினமும் வீட்டுப் பாடம் (Home work) கொடுத்து அதனை சரி பார்த்து, மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வகுப்பை நடத்திச் சென்ற விதம் இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.நான் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருப்பதற்கு இந்த ஆசிரியரின் பங்கு மகத்தானது.அவருக்கு இந்த இடுகையை மனமார சமர்பிக்கிறேன்.///

  நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதர்கள் ஆசிரியர்கள்!

  பதிலளிநீக்கு
 6. அழகிய நினைவு கூறல். ஒரு வழிகாட்டியாய் உங்களை வழிநடத்திய அந்த ஆசிரியர் வணங்கத்தக்கவர்.

  பதிலளிநீக்கு
 7. என் தம்பியும் ஆசீர்வாதம் சாரிடம் தான் படித்தான்.அவரை அவன் போற்றிப் புகழாத நாளே இல்லை.அவன் இன்றைக்கும் கால்குலேட்டரை உபயோகிக்க மாட்டான்!கேட்டால் நான் அவர் ஸ்டூடெண்ட் என்பான்!....

  பதிலளிநீக்கு
 8. மிக்க நன்றி சந்தனமுல்லை,லோகு,பெயரில்லா,தேவன் மாயம் மற்றும் இராதாகிருஷ்ணன்.
  இந்த இடுஅகை எழுதும் போது நினைத்தேன் குறைந்தபட்சம் வேறு யாராவது ஒருவர் ஆசிரியர் ஆசீர்வாதம் அவர்களிடம் படித்தவர் பின்னுடமிடுவர் என்று.அதை நீங்கள் மெயபித்துவிடீர்கள்.நன்றி இடுகை.

  பதிலளிநீக்கு
 9. //நல்ல ஆசிரியர் கிடைப்பதும் இறைவனின் வரம் தான். இந்த இடுகையைப் படிக்கும் போது உங்களின் ஆசிரியர் நினைவு வருவது தவிர்க்க முடியாதது//
  நாங்களும் உங்களைப்போலவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு