ஸ்ரீதேவி பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை என எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் கோகிலா என்ற சினிமாவில் நடித்தது தான் எனக்கு பிடிக்கும். அதிலும் அந்த குலோப்ஜாமூன் ஸ்பூனை வைத்து சாப்பிடும் காட்சி , "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்" என்ற இளையராஜாவின் பாடல். மறக்க முடியாதது. அப்போதெல்லாம் இளையராஜா இசை என்பது "the only car travelling in a free way without speed limit" என்பது போல். இன்று திரையிசை மாம்பலம் லேக் வியூ ரோடில் கார் ஓட்டியது போல் தான்.
மீண்டும் ஸ்ரீதேவியை பல ஆண்டுகள் கழித்து திரையில் பார்த்தது மனது பழைய நினைவுகளில் வலம் வந்தது. இந்த சினிமாவின் கதை ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நடுவயதுப் பெண்ணைச் சுற்றி நடக்கிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் குழந்தையும், கணவனும் ஸ்ரீதேவியை அவமானபடுத்துவது, அதிலிருந்து அவர் மீண்டு வரும் முயற்சி தான் கதைக் கரு. இதை படமாக்கிய விதம் அருமை. ஆங்கிலம் ஒரு மொழி தான். அது தெரிவது அல்லது தெரியாமல் இருப்பது குடும்பம் நடத்த எந்த விதத்தில் உதவும். பலருக்கும் இந்த ஆங்கில மோகம் இருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. குடும்பம் நடத்த அன்பும், புரிதலும் போதுமானது.தொழிலுக்காக கணிதம், பொறியியல், மருத்துவம், ஜாவா படிப்பது போல் தான் ஆங்கிலமும்.
அஜித் ஒரு காட்சியில் வந்தாலும் கச்சிதம். மிக அழகாகவும் இருக்கிறார். பல நாடுகளைச் சேர்த்தவர்கள் கூடி ஆங்கிலம் கற்பது சிறப்பாக கதைக்குள் பொருந்தி வருகிறது. ஸ்ரீதேவி லட்டு செய்வது ஒரு குறியீடு தான். இறுதியில் ஸ்ரீதேவி பேசுவது கூட இயற்கையாகவே உள்ளது.
வீட்டில் கிடைக்கும் மரியாதை மற்றும் அன்பு தான் மனித வாழ்க்கைக்கு முக்கிய அடிநாதமாகிறது. அதை அதிகம் மிகையின்றி சொல்லி உள்ளார்கள். நிச்சியம் பார்க்க வேண்டிய படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக