ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
பீப்ளி லைவ் (Peepli Live) - காட்சி ஊடகங்களின் உல்லாசம்
ஒரு விவசாயின் சாவின் அறிவிப்பை இந்தியாவும், அதன் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள் - குறிப்பாக தொலைக் காட்சிகள் - எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இதை அருமையான நக்கலுடன் படமாக்கப் பட்டுள்ளது.
இந்தப் படத்தில் எந்த மசாலாவும் இல்லை. அரசியல்வாதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பது பல படங்களில் பார்த்தது தான். அதில் பெரிய புதுமை இல்லை. ஆனால் தொலைக் காட்சிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மலத்தைக் கூட விடாமல் காட்டி கொண்டாடுகிறது ஒரு தொலைக்காட்சி.
படம் முழுவதும் ஒரு பகடி. அதனால் எந்த உணர்ச்சிகளுக்கும் இடமே இல்லை. படம் பார்க்கும் போது ஒரு விவசாயியின் துன்பம் பற்றிய எண்ணம் சிறிது கூட மனதில் உருவாகவில்லை. இதை ஒரு வருத்தம் அளிக்கும் விஷயமாக இந்திய சமுதாயத்தின் ஒரு பகுதி கூட காணவில்லை என்பது கொடுமை தான். பகடி மூலம் விருதுகளும், நிறைய பணமும் இந்த படம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒட்டு மொத்த இந்திய சமூகத்தை இப்படி உணர்ச்சியற்ற கும்பலாகக் காட்டியுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.
ஆக மொத்தம் இந்தப் படம் பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கவில்லை.
இந்தப் படம் நல்லாயிருக்கு ஆனால் நல்லாயில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சர்காஸ்டிககான படம் கொடுத்தால் தான்,சர்ச்சையில்லாமல் வெளி வர முடியும்,தவிர அதுவே பார்வையாளரை ஈர்க்கவும் செய்யும்,பிழிந்து பிழிந்து அழுவதற்கு அதிகம் பேர் இங்கே தயாரில்லை.இது ஒரு அசாதாரண சினிமா.
பதிலளிநீக்கு==
பாருங்கள் ஒரு சாதாராண விவசாயியை முன்னிறுத்தும் எளிய பாத்திரம்,தமிழில் எடுக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு ரோஸ் பவுடர்,லிப்ஸ்டிகெலாம் போடவேண்டியிருக்கும்.
நல்ல படத்தை பகிர்ந்தமைக்க்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குநன்றி கீதாப்ரியன். இது ஓர் அருமையான படம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிகபட்ச பகடியில் விவசாயினுடைய துன்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பதிலளிநீக்கு//ஆனால் அதிகபட்ச பகடியில் விவசாயினுடைய துன்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. //
பதிலளிநீக்குபடம் பார்த்துவிட்ட என் நண்பரும் கூட இதையே தான் சொன்னார். உண்மைதான் பாஸ்கர்.
இங்கும் பல சினிமாக்களில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையிலிருக்கும் துன்பத்தை விட, அவர்களை வைத்து காமெடி காட்சிகளே அதிகமாக காட்டப்பட்டுள்ளன.
நன்றி பாலபாரதி.
பதிலளிநீக்கு