செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

இந்த வாரக் கணக்கு - 17


தியாகுவும்,லோகுவும் ஒரு சுவையான விளையாட்டு விளையாடத் தீர்மானிக்கிறார்கள்.அந்த விளையாட்டு இது தான்.

"ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு பூ விழுந்தால் தியாகுவுக்கு ஒரு மதிப்பும்,தலை விழுந்தால் லோகுவுக்கு ஒரு மதிப்பும் கொடுக்கப்படும்.முதலில் யார் 10 மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்".

ஆளுக்கு 50 ரூபாய் போட்டு 100 ரூபாய் பந்தயப் பணத்தை வைத்து விளையாட முடிவு செய்தனர்.ராஜா நடுவராக இருக்க சம்மதித்தார்.தியாகு 8 மதிப்பும்,லோகு 7 மதிப்பும் எடுத்திருக்கும் போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் லோகு அவசரமாக வேறு இடத்திற்குச் செல்ல வேண்டியாகியது.தியாகுவும், லோகுவும் 100 ரூபாய் பந்தயப் பணத்தை எப்படி பகிர்த்து கொள்வது என ராஜாவைக் கேட்டனர்.ராஜா உடனடியாக தியாகுவின் 8 மதிப்பையும்,லோகுவின் 7 மதிப்பையும் கணக்கில் கொண்டு பணத்தைப் பிரித்துக் கொடுத்தார்.தியாகுவுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

11 கருத்துகள்:

  1. இன்னாபா !! வெள்ளாட்டா போச்சா ? இது மேரி கஷ்டமான கேள்வி, அல்லாம் கேப்பென்னு தேர்ந்ஜா நானு இந்த பக்கமே வந்து இருக்க மாட்டேனே , ஐயோ !! சாமி !! நானு கணக்குல வீக்கினு தெர்ஜி பூடும் போல கீதே

    பதிலளிநீக்கு
  2. The divide should be based on the probability of hittng 10. So thyagu (8)and Logu (7) divide 100 based on this... thyag gets 60 and Logu gets 40

    thyagarajan.

    பதிலளிநீக்கு
  3. டவுசர் பாண்டி தங்கள் வருகைக்கு நன்றி.என்னா நயினா பரவால்லே. வந்து போங்க.ஒன்னும் கஷ்டமில்லே.சுளுவா விடை தரேன்.தப்பா போட்டத் தான் கணக்கு தலிவா.

    பதிலளிநீக்கு
  4. தியாகராஜன் நீங்கள் கூறியது போல் நிகழ்தகவு உபயோகிக்க வேண்டியது தான்,ஆனால் நீங்கள் பணத்தைப் பகிர்ந்தது சரியாக இல்லை.நிகழ்தகவு காணும் போது ஏதோ தவறு நடந்துள்ளது.மீண்டும் முடிந்தால் பாருங்கள்.மற்றவர்களுக்கு சிறிது நேரம் கொடுத்து பிறகு நான் செய்முறையை விளக்குகிறேன்.இதைப் போல் ஒரு கணக்கில் இருந்து தான் பெர்மட் மற்றும் பஸ்கல் என்ற இரண்டு கணித மேதைகள் நிகழ்தகவு என்ற கோட்பாட்டை நிறுவினார்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராஜ் தங்கள் வருகைக்கு.ஆனால் விடை சரியாக இல்லை.கணக்கிடும் போது தவறு நேர்த்திருக்கலாம்.முயற்சிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. My first guess was based on simplying the chances... 3 tosses are required for Lokesh and 4 chances are reqd for Thyag. it proved incorrect.

    second attempt... for Lokesh to reach 10 he has to win 3 consecutive toss. The probability will be 50% chance for the first toss, 25% chance for the second consecutive win and 12.5% chance for third consecutive win. Then divide 100 rs 87.5% for thyag and 12.5 % for Lokesh. tyagarajan

    பதிலளிநீக்கு
  7. தியாகராஜன் நாளைக்கு ஒரு தெளிவான செய்முறையும்,விடையும் கொடுக்கிறேன்.நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பாஸ்கர், நம்முர்ல உங்களமாதிரி அறிவாளிங்க கம்மி ...

    விடை ப்ளீஸ் .....

    பதிலளிநீக்கு
  9. ராஜ் விடை 68.75. என்னுடைய "வாரக் கணக்கு - 17 செய்முறையும் விடையும்" என்ற இடுகையைப் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு