வியாழன், 20 ஆகஸ்ட், 2009

16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வயதைச் சொல்லும் ஒரு புதிர்

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது 16 வயதிற்கு கீழ் இருந்தால், அவர்களின் வயதைக் கேட்காமல். கீழே உள்ள கட்டத்தில் எந்த பத்திகளில் (columns) அவர்கள் வயது வந்துள்ளது என்று மட்டும் கூறும் படி கேளுங்கள். அவர்கள் கூறும் பத்திகளின் முதல் வரிசையில் (Row) உள்ள எண்களின் கூட்டுத் தொகை தான் அவர்களின் வயதாகும்.

+----+----+----+----+----
| 02 | 08 | 04 | 01 |
| 03 | 09 | 05 | 03 |
| 06 | 10 | 06 | 05 |
| 07 | 11 | 07 | 07 |
| 10 | 12 | 12 | 09 |
| 11 | 13 | 13 | 11 |
| 14 | 14 | 14 | 13 |
| 15 | 15 | 15 | 15 |
+----+----+----+----+----

குறிப்பாக ஒருவருக்கு 11 வயது எனக் கொள்வோம்.

11 வரும் பத்திகள் மூன்று. அந்த பத்திகளின் முதல் வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை
2+8+1 =11 ஆகும்.

இந்தப் புதிரில் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் மிகச் சுலபமாகப் புரிந்து விடும்.31 மற்றும் 63 போன்ற எண்களுக்கும் இதனை முயற்சித்துப் பார்க்கலாம்.

6 கருத்துகள்:

  1. நன்றாக இருக்கு, என் மகள் வயதைக் கணக்கிட்டேன் சரியாக இருந்தது. சிறப்பான பட்டியல்

    பதிலளிநீக்கு
  2. இன்னொரு 6 x 32 கட்டம் போட்டால் 64 வயது வரைக்கும் கூட சொல்லிவிட முடியும் !
    ;)

    பதிலளிநீக்கு