சுஜாதா இன்றும் சாதாரண தமிழ் வாசகனுக்கு ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். புத்தகக் கண்காட்சியில் அவர் புத்தகங்கள் அதிக அளவு விற்று வருவது, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும் அவர் தாக்கம் இருப்பதைக் காண முடிகிறது.
அதற்கு அவருடைய எழுத்து தொழில்நுட்பம் ஒரு முக்கிய காரணி.
அவர் அறிவியல், இலக்கியம், சரித்திரம் என பல துறைகளில் எழுதினார். அவரளவுக்கு இப்படி வெவ்வேறு துறைகளில் வேறு எந்த தமிழ் எழுத்தாளரும் எழுதி உள்ளாரா? எனக்குத் தெரிந்து இல்லை என்று தான் கூற முடியும்.
சுஜாதா 1991 ஆம் ஆண்டு (ரோஜா சினிமா வெளியான நேரம்) என நினைக்கிறன். அவர் திருநெல்வேலியில் ஆர்யா என்ற ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கணிதம், கணணி, numerical methods பற்றியெல்லாம் பேசினார். அதில் அவருக்கு ஆழமான புரிதல் இருந்தது நன்றாகத் தெரிந்தது.
ஆனால் அவர் அறிவியல் கட்டுரைகள் அந்த அளவிற்கு ஆழமானதாக இல்லை. இது அவர் மீது வைக்கப்படும் ஒரு பெரிய குற்றச்சாட்டு. பொதுவாக அவர் பிரபல பத்திரிக்கைகளில் எழுதியதால் சமரசம் செய்து கொண்டும், எளிமையாகவும் எழுதினாரா தெரியவில்லை.நல்ல ஆழமான அறிவியல் கட்டுரைகள் எழுத்தும் அளவிற்கு அவருக்கு சரக்கு இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
அவருடைய இலக்கிய பங்களிப்பு, பொதுவாக, ஒரு பொழுதுபோக்கு இலக்கியம் என்ற அளவில் நிராகரிக்கப்பட்டாலும் , அவருடைய ரசிகர்கள் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. அவர் தந்தை இறந்த போதும், அவருக்கு எழுபது வயதான போதும் எழுதிய கட்டுரைகள் இலக்கியத் தரமானவை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என எவருமில்லை. சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்புக் குறித்து தரமான, நேர்மையான விமர்சனங்கள் வர வேண்டும்.
எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் கட்டுரையில் கூறியது போல்,
http://www.jeyamohan.in/?p=8412
எழுதுவார் என எதிர்பார்ப்போம். மற்றவர்களும் எழுதட்டும்.
அதிலிருந்து பிறக்கும் கருத்துருவாக்கம் அவருடைய இலக்கிய இடத்தை நிரந்தரமாக நிர்ணயிக்கும். இலக்கியத்தை விடுவோம்.
சுஜாதா தமிழின் ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத எழுத்தாளர் மற்றும் ஓர் இளைய தலைமுறைக்கு நல்ல இலக்கியத்தை அடையாளம் காட்டிய வழிகாட்டி என்பதை சரித்திரம் தவறாமல் தானே எழுதிக் கொள்ளும்.