செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இறைவன் கேட்ட வரம்


நிகரில்லா நண்பர்கள் கொடுத்த

இறைவனுக்கு நன்றி என்றேன்.

நன்றி சொல்லி நழுவாதே என

பொறாமையாகப் பார்த்த இறைவன்

வரம் ஒன்று வேண்டுமெனக் கேட்டான்.

கொடுப்பவன் கேட்க என்னிடம்

என்ன இருக்கிறது என்று நினைக்கையில்

உன் நண்பர்கள் குழுவில் சேர

அவர்களை அறிமுகப்படுத்து என்றான்.

சனி, 6 பிப்ரவரி, 2010

1089 என்ற எண்ணின் மர்மம்


எந்தவொரு மூன்று இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளவும்.
அந்த மூன்று இலக்க எண்ணின் முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் 2 அல்லது அதை விட பெரியதாக இருக்க வேண்டும்.உதாரணமாக 133 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். அந்த எண்ணை 331 என்று திருப்பி எழுதவும்.

331 - 133 = 198


இப்போது

198+891=1089

எந்த மூன்று இலக்க எண் முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் 2 அல்லது அதை விட பெரியதாக இருக்குமாறு எடுத்துக் கொண்டு, மேலே குறிப்பிட்ட முறையை செயல் படுத்தினால் எப்போதும் 1089 என்ற எண் கிடைப்பதைக் கண்டறியலாம்.
"1089 and All That" என்ற புத்தகத்தில் டேவிட் அசிசொன் என்பவர் இதைப் போல் பல சுவையான தகவல்களை கொடுத்திருக்கிறார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் சிறிது நாட்கள் பதிவு எழுத முடியவில்லை. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்