செவ்வாய், 20 நவம்பர், 2012

மொழிபெயர்ப்பு கவிதை சில்வியா பிளாத்


அமெரிக்கக் கவிஞர் மற்றும் நாவலாசிரியருமான சில்வியா பிளாத் 1932 ஆம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்தார். அவர் கவிதைகள் ஆழமான வார்த்தைத் தேர்வுகள் கொண்டதோடு, வாழ்வின் வலிகளை தன் சொந்த அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவைகளாக உள்ளன. அவர் எழுதிய பல கவிதைகளில் “கண்ணாடி” (mirror) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழகான பொருள் செறிவுடன் கண்ணாடி என்ற தலைப்பைக் கொண்ட கவிதையின் மொழிபெயர்ப்பை இங்கு தருகிறேன். நம் மன நிலைக்கு ஏற்ப நம்முடைய முக மாறுதல் ஏற்படும். கண்ணாடியில் பார்க்கும் போது அந்த மனநிலைக்கேற்ற முகத்தை பிரதிபலிக்கிறது. கவிதையும் அந்த வகையைச் சார்ந்தது தான். படிப்பவரின் வாழ்வனுபவம் மற்றும் மனநிலைக்கேற்ப கவிதையின் பொருள் விரிகிறது. நிச்சியம் சில்வியாவின் இந்தக் “கண்ணாடி” க்  கவிதை அந்த அனுபவத்தைக் கொடுக்கும்.



கண்ணாடி

நான் வெள்ளி மற்றும் துல்லியம். நான் முன்முடிவுகளோடு இல்லை.
நான் பார்க்கும் எல்லாவற்றையும் உடனே முழுங்குகிறேன்
அப்படியே, அன்பால் அல்லது வெறுப்பால் மறைக்கப் படாமல் .
நான் கொடூரமில்லாமல் இருக்கிறேன், உண்மையாக  மட்டும்  -
ஒரு சிறிய கடவுளின் கண் , நான்கு மூலைகளில்.
நிறைய நேரங்களில் நான் எதிரிலிருக்கும் சுவரை தியானிக்கிறேன்.
அது இளஞ்சிவப்பு, சிறு புள்ளியுடன். நான் அதை நீண்ட நேரம் பார்த்திருந்தேன்
நான் நினைக்கிறேன் அது என்னுடைய இதயத்தின் பகுதி என்று. ஆனால் அது படபடக்கிறது.
முகங்களும் இருளும் நம்மை மீண்டும் மீண்டும் பிரிக்கிறது.
நான் இப்போது ஓர் ஏரியாக இருக்கிறேன்.  ஒரு பெண் என் மேல் வளைகிறாள்,
என்னுடைய ஆழத்தைத்   தேடிக் கொண்டு அவள் உண்மையாக என்னவென்றரிய.
பிறகு அவள் அந்த பொய்யர்களிடம் திரும்புகிறாள், அந்த மெழுகுவர்த்திகள் அல்லது அந்த நிலவு.
நான் அவளுடைய பின் புறத்தை பார்க்கிறேன், மேலும்  அதை பிரதிபலிக்கிறேன் உண்மையுடன்.
அவள் கண்ணீர்களால் எனக்கு பரிசளிக்கிறாள் நடுங்கும் கரங்களுடன்.
நான் அவளுக்கு முக்கியமாக இருக்கிறேன். அவள் வருகிறாள் மற்றும் போகிறாள்.
ஒவ்வொரு காலையும் அந்த அவளுடைய முகம் தான் அந்த இருளை மாற்றி அமைக்கிறது.
என்னுள் அவள் ஒரு சிறிய பெண்ணாக மூழ்கினாள், மற்றும் என்னுள் ஒரு வயதான பெண்
எழுகிறாள் அவளை நோக்கி நாள் பின் நாளாக, ஒர் அச்சுறுத்துகின்ற மீனைப் போல.

மலைகள்.காம் இணைய இதழில் வெளியானது.

திங்கள், 12 நவம்பர், 2012

மொழிபெயர்ப்பு கவிதை அமெரிக்கக் கவிஞன் லாங்க்ஸ்டன் ஹுஹ்ஸ்

என் தளம் வாசிக்கும் தெரிந்த மற்றும் முகம் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் .

மலைகள்.காம்  என்ற இணைய இதழில் இந்த மொழிபெயர்ப்பு கவிதைகள் இடம் பெற்றன. லாங்க்ஸ்டன் ஹுயூஸ் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களில் ஒருவர்.
இந்த கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.




Acceptance
God in His infinite wisdom
Did not make me very wise-
So when my actions are stupid
They hardly take God by surprise

அங்கீகாரம்

கடவுள் தன்னுடைய அளவில்லா ஞானத்தில்
என்னை கூர்மையான அறிவுடன் உருவாக்கவில்லை
அதனால் என்னுடைய செயல்கள் மடத்தனமாக இருக்கும் சமயம்
அவைகள் கடவுளால் ஆச்சிரியமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

Dreams

Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.
Hold fast to dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow.

கனவுகள்

கனவுகளை வேகமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் கனவுகள் இறந்தால்
வாழ்க்கை பறக்க முடியாத
சிறகிறந்த பறவையாகிறது.
கனவுகளை வேகமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் கனவுகள் போய்விடும் சமயம்
வாழ்க்கை உறைந்த பனியினாலான
ஒரு தரிசு நிலமாகிறது.

Ennui

It’s such a
Bore
Being always
Poor.

சலிப்பு

அது அத்தகைய ஒரு
களைப்பானது
என்றென்றும் ஏழையாகவே
இருப்பது.

Oppression

Now dreams
Are not available
To the dreamers,
Nor songs
To the singers.
In some lands
Dark night
And cold steel
Prevail
But the dream
Will come back,
And the song
Break
Its jail.

அடக்குமுறை

இப்போது கனவுகள்
கிடைப்பதில்லை
கனவு காண்பவர்களுக்கு,
பாடல்கள் பாடகர்களுக்கு.
சில நிலங்களில்
கருமையான இரவும்
குளிர்ந்த இரும்பும்
இருக்கின்றன
ஆனால் அந்த கனவு
மீண்டும் வரும்
மேலும் அந்த பாடல்
உடைக்கும்
அதனுடைய சிறையை.

Peace

We passed their graves:
The dead men there,
Winners or losers,
Did not care.
In the dark
They could not see
Who had gained
The victory.

அமைதி

நாங்கள் அவர்களுடைய கல்லறைகளை கடந்தோம்
இறந்த மனிதர்கள் அங்கே,
வென்றவர்கள் அல்லது தோற்றவர்கள்,
கவனிக்க வேண்டாம்.
அந்த இருட்டில்
அவர்களால் பார்க்க முடியாது
வெற்றியை
வென்றெடுத்தவர்களை.
•••