தொழில்நுட்பத் துறையில் கூகிள் நுழையாத இடமே இல்லை என்று கூறலாம். க்ரோம் உலாவி (browser) இன்று பலரால் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆனாலும் கூகுளின் இந்த உலாவி நினைத்த அளவு சந்தையில் வெற்றி பெறவில்லை என்றே கூறலாம்.இதற்கு நடுவே கூகிள் க்ரோம் இயக்குதளத்தை (operating system) உருவாக்க முயற்சி மேற்கொண்டது. அடுத்த ஆண்டு சந்தைக்கு வருவதாக இருந்த க்ரோம் இயக்கு தளம் இன்னும் ஒரு வாரத்தில் கணணி உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்க உள்ளது.
இது இலவச மென்பொருளாக கிடைக்க உள்ளதால் யார் வேண்டுமானாலும் தரவிறக்கி பயன் படுத்தலாம். ஆனால் இது எல்லா கணணிகளிலும் முதலில் பயன் படுத்த முடியாது. உங்களிடம் வலைப் புத்தகங்கள் இருந்தால் மட்டுமே தரமிறக்கி பயன் படுத்தவும். காலப் போக்கில் கூகிள் அதன் இயக்குதளத்தை எல்லா கணனிகளிலும் பயன் படுத்தும் விதத்தில் மேம்படுத்த உள்ளது. மேலும் க்ரோம் உலாவியை இந்த க்ரோம் இயக்குதளத்துடன் கூகிள் ஒருங்கிணைத்து உள்ளது. ஒரு முறை இந்த உலாவியில் உங்கள் பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்நுழைந்தால் கூகுளின் ஜீமைல் போன்ற மற்ற பயன்பாட்டு கருவிகளிலும் உள்புகுந்ததாக க்ரோம் உலாவி அறிந்து கொள்ளும். ஆனால் கூகிள் மற்ற உலாவிகளை (IE,FIREFOX,SAFARI..) இந்த இயக்குதளத்தில் அனுமதிப்பதாகத் தெரியவில்லை. இது பெரிய சர்ச்சைக்கு உள்ளாகலாம்.
சாதாரண தேடுபொறி பயன்பாட்டை அளிக்கும் நிறுவனமாக ஆரம்பித்த கூகிள் இன்று தொழில்நுட்பத் துறையில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. க்ரோம் இயக்குதளம் கூகிளுக்கு மேலும் புகழைத் தேடித் தருமா? மேலும் மைச்ரோசாப்டிற்கு ஒரு சவாலாக அமையவும் வாய்ப்புள்ளது. பொறுத்திருந்துப் பார்ப்போம்