செவ்வாய், 16 ஜூன், 2009

அம்மா போடும் கோலம்


தூக்கத்திலிருந்து விழிக்கும் கதிரவன்
மரத்தினூடே பார்க்கும் இரண்டு காகங்கள்
தெரு ஓரத்தில் குறைக்கும் நாய்
தழுவிச் செல்லும் தென்றலால் சிலிர்க்கும் இலைகள்

தண்ணீர் தெளித்து பெருக்கித் தள்ளி
புள்ளிகள் வைத்தாள்
சில புள்ளிகள் நேராக
மற்றவைகள் வளைவாக இணைத்தாள்

கோலத்தின் அழகா? அம்மாவின் திறமையா?
விரிந்த விழிகளில் மகள் பார்க்க
கோலத்தை மிதித்து "பேப்பர்" எடுக்கச்
சென்ற அப்பா
புன்னகை மாறாமல் கோலத்தை
சரி செய்த அம்மா

அப்பா "சாரி" கேட்டால் என்ன
என்று மகள் கேட்க
"அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது"
என்றாள் அம்மா.

6 கருத்துகள்:

  1. ஒரு நல்ல கவிதைங்க... நச் மேட்டர் ! நன்றி..!

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்கு.கொஞ்சம் டிங்கரிங் பண்ணலாமோ?

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜய்.உங்கள் தளத்திற்கு வந்தேன்.படங்கள் நன்றாக இருந்தன.ஓட்டும் போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
  4. நேசமித்ரன் மிக்க நன்றி தங்கள் வருகைக்கு.
    உங்கள் தளம் பார்த்தேன்.
    உங்கள் கவிதை மழைகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ரவி ஷங்கர் மிக்க நன்றி தங்கள் வருகைக்கு.
    டிங்கரிங் செய்யலாம்.சொல்லுங்கள் செய்திடுவோம்.

    பதிலளிநீக்கு
  6. ப்ரியங்கள் நிறைந்த பாஸ்கர்,
    மிக அழகான வெளிபாடு.ஓட்டிட இன்னும் கற்கவில்லை.கற்றதும் வந்து ஓட்டு போடவேண்டிய கவிதை.வந்து கை நனைச்சுட்டு போயிருக்கிறேன்.எனக்கும் நிறைவு! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு