வெள்ளி, 19 ஜூன், 2009

புதிய வித்தியாசமான தேடு பொறி wolframalpha

Bing தேடு பொறி பற்றி பலவிதமான பதிவுகள் வந்து விட்டன.கூகிளுடன் பின்கை ஒப்பிட்டு பல பதிவர்களும்,பத்திரிகைகளும் எழுதி விட்டன.wolframalpha
என்ற புதிய தேடு பொறி பற்றி இப்போது பார்ப்போம்.

1.இந்த தேடு பொறியை உருவாக்கியது வோல்பார்ம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் "mathematica" என்ற மென்பொருளை அறிவியல் மற்றும் தொழிற் நுட்ப ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவும் வகையில் பல ஆண்டுகளாக கொடுத்து வருகிறது.

2. "mathematica" என்ற மென்பொருளையும், இந்த நிறுவனத்திடம் உள்ள மிகப் பெரிய தரவு சேமிப்பையும் உபயோகித்து தான் இதில் தேடுவதற்கு பொருள் கொடுக்கிறது.

3.இது கூகிளுக்கோ அல்லது பிங்கிர்க்கோ போட்டி ஆகாது. ஏனெனில் இது நேரடியாக தகவல் கொடுக்கும் கருவியாக உள்ளது.கூகிள் போல் ஒவ்வொரு பக்கமாக சென்று தகவலைத் தேட வேண்டாம்.

4.இது கிட்டத்தட்ட கூகிள் தேடுதலுக்கும்,விக்கிபிடியாவுக்கும் இடைப்பட்ட தகவல் கொடுக்கும் ஒரு கருவி என்றால் மிகையாகாது.

5. கால்குலேடர் நாடாமல் இணையத் தளத்தை பயன் படுத்தி எந்த விதமான கணிதக் கேள்விகளுக்கும் விடை அறியலாம்.

உதாரணத்திற்கு "India population" என்பதைத் தேடினால் கிடைக்கும் விடையை கிழே காணவும்.

"sin2x+cos2x" எனத் தேடினால் கிடைக்கும் ஒரு பகுதி விடை இங்கே:இந்த தேடு பொறியை உபயோகிப்பதில் உள்ள சில சிக்கல்களை இப்போது காணலாம்

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7.0 அல்லது பஃயர்பக்க்ஸ் 3.௦ ஆவது குறைந்த பட்சம் தேவை இதை பயன்படுத்த.

2. கூகிள் போல் தவறாக தட்டச்சிட்டால் சரி செய்து விடை கொடுக்க முடியவில்லை.முழிக்கிறது.

3.இதை சிறிது பயன்படுத்தி தேடும் முறையை அறிந்து கொண்டால் இந்தக் கருவி மிக மிக உபயோகமாக இருக்கும்.

http://www.wolframalpha.com/

என்ற சுட்டியை சொடுக்கி முயன்று பார்த்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.

6 கருத்துகள்:

 1. அருமையான பயன்பாடு. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. கணினியில் தேடுவது போல இல்லாமல் வேறு ஒருவரிடம் கேட்டு தகவல் பெறுவது போன்ற உணர்வு.

  அன்புடன்,
  மா சிவகுமார்

  பதிலளிநீக்கு
 2. நன்றி சிவகுமார். தங்கள் வருகைக்கு.

  பதிலளிநீக்கு
 3. நண்பரே!நீங்கள் ஒன்று(ஒன்று அல்ல பல) எழுத மறந்து விட்டீர்கள்,இதில் நீங்கள் trichy to chennai என்று குறிப்பிட்டால் இவை இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக் காட்டும்,மேலும் இதில் உங்கள் பிறந்த தேதியை குறிப்பிடலாம்...போன்ற எல்லாவற்றையும் தேடலாம்.இதனின் பயன்பாடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது http://www06.wolframalpha.com/examples/

  பதிலளிநீக்கு
 4. வாங்க பாஸ்கர் வாங்க.
  முதல் தொழில்நுட்ப பதிவிவையே பாப்புலர் ஆக்கிட்டீங்க.

  ஓட்டு போட்டாச்சு.

  //நண்பரே!நீங்கள் ஒன்று(ஒன்று அல்ல பல) எழுத மறந்து விட்டீர்கள்,//

  எல்லாத்தையும் ஒரே பதிவில் எழுதினால் எவனும் படிக்கமாட்டான்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி இம்ரான்.உங்கள் அறிவுரையை அடுத்த முறை பயன் படுத்த முயற்சிக்கிறேன்.வருகைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நன்றி சாயிதாசன். நீங்கள் கொடுத்த அறிவுரையை ஏற்றுத் தான் இந்தப் பதிவு எழுதினேன்.எதிர்பார்க்கவே இல்லை.இதற்கு ஆதரவு கிடைக்கும் என்று.உங்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு