ஒரு தபால் நிலையத்தில் 46 பைசாக்கள் மற்றும் 55 பைசாக்கள் மதிப்பு கொண்ட தபால் தலைகள் மட்டும் விற்கிறார்கள். எப்போதும் போல் தபால் நிலையத்தில் சில்லறை பிரச்சனை. நீங்கள் முழு ரூபாய் மதிப்பில் தான் தபால் தலை வாங்க வேண்டிய கட்டாயம். நீங்களோ மிகக் குறைந்த ரூபாய் செலவில் இந்த வியாபாரத்தை முடிக்கப் பார்க்கிறீர்கள். குறைந்த பட்சமாக முழு ரூபாயாக எவ்வளவு பணத்தை நீங்கள் செலவு செய்ய வேண்டியதிருக்கும்?
101 ரூபாய் ?!?!
பதிலளிநீக்குவேற ஏதாவது நுணக்கமான கணக்கு போட வேண்டியிருக்கும்னு தான் நினைக்கிறேன்.
ஏதோ நமக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் :-(
14 x 55 = 770
பதிலளிநீக்கு5 x46 = 230
770+230 = 1000ps / 100 = 10 Rs.
உங்களுக்கு ஒரு சிறிய விருது
பதிலளிநீக்குhttp://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html
8*55 = 440
பதிலளிநீக்கு10*46 = 460
ஒன்பது ரூபாய்.
15 x 46 = 690
பதிலளிநீக்கு2 x 55 = 110
690 + 110 = 800 = Rs.8/-
pls give me a explanation
நீக்குநன்றி இளைய கரிகாலன் மற்றும் திஷு.
பதிலளிநீக்குஉங்கள் முயற்சிக்கு என் நன்றிகள்.
சூர்யா கண்ணன்,
பதிலளிநீக்குதங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும்,முக்கியமாக விருதுக்கும் மிக்க நன்றி.
நான் எனக்கு பிடித்த வலைத்தளங்களுக்கு அதனை பகிர்கிறேன்.
லோகு,
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விடாமல் வாரக் கணக்குகளை முயற்சித்து இந்த முறை சரியான விடை கொடுத்து விட்டீர்கள்.இந்த இடுகையின் படத்தில் 8R என விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை போல் உள்ளது.சரி.இந்த கணக்கை நான் செய்த முறையை விளக்குகிறேன்.
m 46 பைசா தபால் தலைகளும்,n 55 பைசா தபால் தலைகளும் வாங்கியதாகக் கொள்வோம்.
உடனே 46m+55n ஒரு இரட்டைப் பட எண்ணாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
எனவே m என்ற எண் 5 ஆல் வகுபடும்.
எனவே, n =0,5,10,15 என்ற மதிப்புக்களை கொடுத்துப் பார்த்தால் விடை உடனே கிடைத்து விடும்.மீண்டு உங்களுக்கு மிக்க நன்றி.