புதன், 19 ஆகஸ்ட், 2009

இந்த வாரக் கணக்கு - 18


ஒரு குதிரை ஒரு நிமிடத்திற்கு 75 மீட்டர்கள் நடக்கிறது.ஓர் ஈ ஒரு நிமிடத்திற்கு 100௦ மீட்டர்கள் பறக்கிறது. நடந்துகொண்டிருக்கும் குதிரையின் மூக்கிலிருந்து அந்த ஈ ஒரு நிமிடம் முன்னால் பறந்து மீண்டும் குதிரையின் மூக்கை வந்தடைகிறது.

கேள்வி இது தான்.

ஈ குதிரையின் மூக்கிலிருந்து கிளம்பி ஒரு நிமிடம் பறந்து மீண்டும் குதிரையின் மூக்கை வந்தடையும் நேரத்தில் குதிரை எவ்வளவு மீட்டர்கள் நடந்திருக்கும்?

9 கருத்துகள்:

  1. உங்கள் தளத்தை பற்றி வலைச்சரத்தில் எழுதி இருக்கிறேன்.. பாருங்கள்.. http://blogintamil.blogspot.com/2009/08/blog-post_4644.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி சாரதி தங்கள் முயற்சிக்கு.ஆனால் விடை இது இல்லை போல் உள்ளது. மற்றவர்களுக்கும் சிறிது நேரம் கொடுத்து விடையை பகிரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி லோகு தங்கள் முயற்சிக்கு.ஆனால் விடை இது இல்லை போல் உள்ளது. மற்றவர்களுக்கும் சிறிது நேரம் கொடுத்து விடையை பகிரிந்து கொள்வோம். நீங்கள் என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Ans: 85.71 m

    In the first minute thehorse must have travelled 75 m and the bee 100 m.

    Let X be the distance that the horse travelled further.
    distance travelled by horse =75+ X
    distance travelled by bee = 100 (onward direction)+ 100-75-X (Return direction)= 125-X


    Time taken is same for both the horse and the bee.
    time taken for horse = 75+x/ 75
    time taken for the bee= 125-x/100

    by equating the same X= 10.71.
    distance by horse =75+10.71 =85.71m
    time - 85.71/75 = 1.14 min.

    thyagaraja

    பதிலளிநீக்கு
  5. தியாகு சரியாக சொல்லி இருக்கிறார்.
    Good.
    என்னுடைய எளிய விளக்கம்.
    ஒரு நிமிடத்தில் குதிரை கடந்த தூரம் = 75 m
    (3 மடங்கு)
    ஒரு நிமிடத்தில் ஈ கடந்த தூரம் = 100 m
    (4 மடங்கு)
    பின்பு ஈ திரும்பி வருகிறது..
    குதிரைக்கும் ஈ க்கும் இடையே உள்ள தூரம் =25 m

    ஒரு நிமிடத்தில் ஈ 4 மடங்கும், குதிரை 3 மடங்கு தூரத்தை கடக்கின்றன.
    மொத்தம் 7 மடங்கு.

    ஆகையால், ஒரு மடங்கின் தூரம்
    25 / 7 = 3.5714 m

    எனவே மீதமுள்ள 25 மீட்டரில்
    குதிரையின் பங்கு ===> 3 x 3.5714m = 10.713 m
    ஈ யின் பங்கு ===> 4 x 3.5714m = 14.285 m

    விடை:
    ஈ திரும்பி குதிரையின் மூக்கை வந்தடையும் போது
    குதிரையின் மொத்த தூரம்= 85.713 m

    75+10.713 = 85.713 m

    பதிலளிநீக்கு
  6. நன்றி லோகு,தியாகு மற்றும் சாரதிக்கு. தியாகுவும், சாரதியும் சரியான விடை கொடுத்திருக்கிறார்கள்.இருவரின் செய்முறையும் பின்பற்றலாம். ஆனால் சின்ன குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது, முடிந்த வரை "x" உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
    ஈயும், குதிரையும் ஒன்றை நோக்கி ஒன்று வரும் போது ஒரு நிமிடத்தில் 175 மீட்டர்கள் கடக்கும்.ஆனால் இரண்டுக்கும் இடையே 25 மீட்டர்கள் தான் இடைவெளி உள்ளது. எனவே, 25/175=1/7
    ==> 1/7X75 = 10.71

    விடை: 85.71 மீட்டர்கள்.

    இதே கணக்கை ஈயின் வேகம் ஒரு நிமிடத்திற்கு 150 மீட்டர்கள் என்று எடுத்துக் கொண்டால் அழகான விடை கிடைக்கும்.முயன்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு