செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பசுவய்யா (சு.ரா) "வருத்தம்" கவிதை - பகிர்வு


இன்று கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்து சு.ரா.வின் கவிதைகள் படிக்கத் தொடங்கினேன். இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனதை ஏதோ செய்கிறது. 1989 ஆம் ஆண்டு எழுதப்பட்டக் கவிதை.நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கவிதையை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.


வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்.

சுந்தர ராமசாமி கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், விலை.ரூ.175 /=.

2 கருத்துகள்:

  1. கவிதைகளை, குறிப்பாக ஏற்கெனவே எழுதப்பட்டு கல்தூணாய் நிற்பவற்றை, இப்படி செண்ட்டர் அலைன்மெண்ட்டில் எல்லாம் கஸ்டமைஸ் செய்யாது வெளியிடுவதுதான் முறை. இதுபோல் படிக்க ஏதோ விளம்பரம் கல்யாணப் பத்திரிகைபோல இருக்கிறது. தயவுசெய்து பரிசீலிக்கவும்.

    பதிலளிநீக்கு