வெள்ளி, 10 ஜூலை, 2009
மறக்க முடியாத ஒரு சகாப்தம்:சுனில் காவஸ்கர்
ஒரு முறை இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தன.அந்த ஆட்டத்திற்கு காவஸ்கரும்,இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோனி கிரேக்கும் தொலைக் காட்சி வர்ணனையாளராக இருந்தனர்.அப்போது சற்று கிண்டலாக "சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில், உங்களை (காவஸ்கரை) 50% கிரிகெட் ரசிகர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனரே" என்று கூறினார் கிரேக்.உடனடியாக அதற்கு "50% கிரிகெட் ரசிகர்கள் என்னை விரும்புவர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷப் படுகிறேன்" என்று காவஸ்கர் பதிலடி கொடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
வெஸ்ட் இண்டீசுடன் தன் கிரிக்கெட் டெஸ்ட் தொடரை 1971ம் ஆண்டு தொடங்கிய கவாஸ்கர் 34 சதங்களுடன் 10122 ரன்களுடன் 1987ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இவரது முதலாவது டெஸ்ட் தொடர் கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையாளர் வந்திருப்பதை உலகத்திற்கு அறிவித்தது.
முதல் டெஸ்ட் தொடருக்குப் பின் வந்த இங்கிலாந்து தொடர்களில் இவர் சரியாக விளையாடவில்லை.அதனால் இவருடைய திறமையின் மீது பலருக்கு சந்தேகம் வந்தது.ஆனால் 1976ம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களில் இவர் வெளிப்படுத்திய நுணுக்கமான விளையாட்டு இவருக்கு உலக அரங்கில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பெற்றுத் தந்தது.
இவருடைய விளையாட்டு வாழ்கையில் 1983-84ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது தான் மிகப் பெரிய, மோசமான சோதனையை எதிர் கொள்ள வைத்தது.கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மால்கோம் மார்ஷல் வீசிய அதிவேகப் பந்தில் காவஸ்கரின் மட்டை கீழே விழுந்து ஆட்டமும் இழந்தார்.இவருடைய எதிர்பாளர்களுக்கு தாங்கமுடியாத சந்தோசம்.பத்திரிகைகள் பலவிதமாக எழுதின. ஆனால் அடுத்து நடந்த டெல்லி டெஸ்டில் மார்ஷல் பந்துகளை விளாசித் தள்ளினார்.பல ஆண்டுகள் உபயோகிக்காமல் இருந்த "hook shot" மீண்டும் பிரயோகித்து எதிரியை திணற அடித்தார்.37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.மேலும் சென்னையில் நடத்த போட்டியில் 236 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதைப் பற்றி மைக்கல் ஹோல்டிங் "கவாஸ்கர் ஒரு சுவர் போல் நின்றிருந்தார்.எத்தனை நாட்கள் பந்து வீசினாலும் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது" என்று கூறினார்.இது காவஸ்கரின் ஒழுக்கம்,கட்டுப்பாடு மற்றும் மனஉறுதியைக் காட்டுகிறது.
இவருடைய மறக்க முடியாத இன்னிங்க்ஸ்களில் சிலவற்றை இங்கு நினைவு கூறுவோம்:
1. 1974ம் ஆண்டு இங்கிலாந்து OldTrafford மைதானத்தில் அடித்த 101 ஓட்டங்கள்
2. 1976ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் "Port of Spain" போட்டியில் அடித்த 156 ஓட்டங்கள்
3. 1979ம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் விளாசிய 221 ரன்கள்
4. 1983ம் ஆண்டு டெல்லியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்த 121 ஓட்டங்கள்
5. இவருடைய இறுதி டெஸ்ட் போட்டியில், மிக மோசமான ஆடு களத்தில், இவர் அடித்த 96 ஓட்டங்கள்.
இவர் எடுத்த ஓட்டங்கள் எதுவுமே ஏனோதானோ என்று எடுத்ததில்லை.மிகவும் நேர்த்தியாக விளையாண்டு எடுத்தவைகள்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், தொலைக் காட்சி வருணனையாளராக அவதாரம் எடுத்தார்.அதிலும் அவர் தலை சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.ஒரு முறை மேற்கிந்திய தீவின் வால்ஷ் பந்து வீசும் போது, வருணனையாளராக இருந்த காவஸ்கர் அவர் ஒவ்வொரு ஓவரிலும் 5 வது பந்து வேகம் குறைவான (ஸ்லொவ் டெலிவரி) பந்து வீசுகிறார் என்று கணித்தார். ஆனால் விளையாடுபவரோ அதைப் பற்றி தெரியாமலே விளையாடிக் கொண்டிருந்தார்.இவருடைய கவனிக்கும் திறனுக்கும்,புத்தி சாதுர்யதிர்க்கும் இது ஒரு சாட்சி ஆகும்.
இன்றும் இவர் பலவிதமான தர்க்கத்திற்கும், விவாதத்திற்கும் மற்றும் ஆட்சேபத்திற்கும் இடமளிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலும்,செய்கைகளிலும் ஈடுபடுகிறார்.குறிப்பாக,1975ம் ஆண்டு முதல் உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் 60௦ ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுத்தது, மெல்பர்ன் போட்டியில் வெளியேறியது மற்றும் உலகக் கிரிக்கெட் குழு குறித்த இவருடைய கருத்து முதலியவைகளைக் கூறலாம்.என்ன இருந்தாலும் இவர் கிரிகெட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை மறுக்க முடியாது.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 13 சதங்கள் அடித்திருக்கிறார்.மேலும் இவர் எந்த தலையணியும் விளையாடும் காலத்தில் உபயோகித்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கிரிகெட்டில் ஒரே ஒரு பிராட்மன் தான் இருக்க முடியும்.அதே போல் ஒரே ஒரு காவஸ்கர் தான் இருக்க முடியும்.அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் காவஸ்கர் பல ஆண்டுகள் நலத்துடன் வாழ வாழ்த்துவோம்.
Labels:
கிரிக்கெட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//இங்கிலாந்துடன் 60௦ ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுத்தது,//
பதிலளிநீக்குஅதுவும் சேஸிங் கட்டத்தில் அதிக விக்கெட்டுகள் கைவசம் இருக்கும்போது அறுபது ஓவர்களும் நின்று ஆடி எடுத்த ஓட்டங்கள் என்று சொல்கிறார்களே உண்மையா? தல..,
//மேலும் இவர் எந்த தலையணியும் விளையாடும் காலத்தில் உபயோகித்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.//
பதிலளிநீக்குஅந்த கால கட்டத்தில் ஹெல்மெட் அணிந்த முதல் மற்றும் ஒரே ஆட்டக்காரர் அவர்தான். சற்று வித்தியாசமாக அவரே வடிவமைத்தாதச் சொல்கிறார்கள்
நல்ல இடுகை பாஸ்கர், காவஸ்கர் (கவாஸ்கர் அல்ல) நிச்சயமாக ஒரு சகாப்தம். நான் அவரின் வெறியன்.
பதிலளிநீக்குசுரேஷ் - காவஸ்கர் அணிந்து Skull Cap, அது Helmet அல்ல. காவஸ்கர் ஹெல்மெட் அணிந்ததே இல்லை
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
ஆமாம் சுரேஷ். காவஸ்கர் ஆடிய நாட்களில் இந்த சம்பவம் திருஷ்டி மாதிரி ஒரு கரும் புள்ளி.தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.காவஸ்கர் எப்போதும் ஹெல்மட் அணிந்ததில்லை.இன்றுள்ள தலைமுறைக்கு அவரை ஒரு தொலைக்காட்சி வருணனையாளராகத் தான் தெரியும்.அவருடைய ஆட்டத்தை நானும் மிகவும் ரசித்திருக்கிறேன்.தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குபொதுவா அவர் கொஞ்சம் செல்பிஷான ஆட்டக்காரர் என்பது அபோதையா அநேகரின் கருத்தா இருந்தது. ஆனா ஸ்டைலிஷான ஆட்டக்காரர் என்பதை யாரும் மறுக்க முடியாது !!!!
பதிலளிநீக்குkavasakar is a very good cricketer, he is a genious !. asustralians are not accept these things , because they never accept a good-player like sachin , dravid - dravid remember the gavaskars game ever i seen
பதிலளிநீக்குநன்றி சதங்கா மற்றும் ஜீவா தங்கள் வருகைக்கு.
பதிலளிநீக்குகவாஸ்கர் கடைசி டெஸ்ட் மேட்ச்ல அடிச்சா தொண்ணூறு ரன் கிளாஸ். ஸ்பின் எப்படி ஆடணும்ன்னு ஒரு மேனுவல் ரிலீஸ் பண்ணலாம் அத வச்சி. i mean how to plan spinner in doctored pitches.
பதிலளிநீக்குகாவஸ்கர் பற்றிய பல சுவையான தகவல்கள். இவர் தனது முதலாவது டெஸ்டில் இரண்டு இனிங்சிலும் 60+ ஓட்டங்களை எடுத்தபோது அப்போதைய இந்திய அணித்தலைவர் காவஸ்கர் சதம் அடிக்கக்கூடாது என்று ஆசைப்பட்டாராம். பொறாமையால் அல்ல. முதல் டெஸ்டில் சதம் அடிப்பவர்கள் தொடர்ந்து பிரகாசிப்பதிலை என்ற ஒரு வழமை இருந்துவந்தது.....
பதிலளிநீக்குஅவரது குறிப்பிடத்தக்க ஆட்டம் ஒரு கண்காட்சி ஆட்டமாக அவர் ஓய்வு பெற்ற பின்னர் இடம்பெற்ற ஒரு போட்டியில் அவர் அடித்த சதம். காவஸ்கர் ஒரு நாள் லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்ததில்லை என்ற குறையை நீக்கிய 180+ ஓட்டங்கள் அவை.
அதுபோல காவஸ்கரின் ஹெல்மட் அவரே வடிவமைத்தது. ஆனால் தலைக்கு குறைந்த பட்ச பாதுகாப்பை தன்னும் தரவல்லது அது. ஆனால் மேற்கிந்திய அணியின் விவியன் ரிச்சாட்ஸ் இறுதிவரை ஹெல்மெட்டே அணியாமல் விளையாடிய ஒரே வீரர்
மணிகண்டன்,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.மேலும் அந்த இறுதிப் போட்டியில் காவஸ்கரின் விளையாட்டு அவருக்கு மகுடம் சூட்டுவது போல் அமைந்தது என்றால் மிகையாகாது.அவர் அடித்த பந்துகளை விட,அவர் அடிக்காமல் மறுத்த பந்துகளில் அவர் திறமை வெளிப்பட்டது.
அருள்மொழிவர்மன்,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.நீங்கள் சொல்வது உண்மை தான்.காவஸ்கரைப் பற்றி பெரிய புத்தகமே எழுதலாம்."சகாப்தம்" என்ற தலைப்பில் அடங்கி இருக்கிறது இந்தக் கருத்து என்று நினைக்கிறேன். "ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்" போல் எழுதப்பட்டது தான் இந்த இடுகை.