வியாழன், 26 பிப்ரவரி, 2009

இந்த வாரக் கணக்கு - 2

அமெரிக்காவில் பணிநீக்கம் என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து வருகிறது.ஒரு நிறுவனத்தில் ஒரு தலைமை அதிகாரி பணிநீக்கம் செய்ய கையாண்ட முறையை கற்பனை செய்வோம்.

"100 தொழிலாளர்களில் பல பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.ஆனால் எல்லோருமே மிகச் சிறப்பாக பணியாற்றியவர்கள்.இருந்தாலும் மிக நியாயமாக செயல் பட ஆசைப் பட்டார்.100 அறைகள் இருந்தன அந்த அலுவலகத்தில்.ஒவ்வொருவரும் ஓர் அறையை தேர்ந்தெடுத்து அதில் இருக்குமாறு பணிக்கப்பட்டனர். எல்லா அறையின் கதவுகளும் மூடப்பட்டன. தலைமை அதிகாரி மேலும் 100 தொழிலாளர்களை அழைத்தார்.கீழ் கண்ட மாதிரி செய்ய பணித்தார்.முதல் தொழிலாளி எல்லா அறையின் கதவுகளையும் திறந்தார்.இரண்டாவது தொழிலாளி 2,4,6,...என்று இரண்டின் பெருக்குத் தொகை உள்ள எல்லா கதவுகளையும் மூடினார். மூன்றாவது தொழிலாளி 3,6,9,...என்று மூன்றின் பெருக்குத் தொகை கொண்ட மூடிய கதவுகளை திறந்தும்,திறந்த கதவுகளை மூடியும் சென்றார்.நான்காவது தொழிலாளி 4,8,12,... என்று நான்கின் பெருக்குத்தொகை கொண்ட மூடிய கதவுகளை திறந்தும்,திறந்த கதவுகளை மூடியும் சென்றார்.இப்படியாக எல்லா 100 தொழிலாளர்களும் செய்து முடித்தனர். இப்போது தலைமை அதிகாரி எந்த கதவுகள் எல்லாம் திறந்து உள்ளதோ அந்த அறையில் உள்ள தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டர்கள் என்று அறிவித்தார்.எத்தனை தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்? பணிநீக்கம் செய்யப்படாத தொழிலாளர்கள் இருந்த அறைகள் எவை?ஏன் அவர்கள் அறைகளின் கதவுகள் மட்டும் திறந்திருந்தது?

3 கருத்துகள்:

 1. Dear Bhaskar:

  I gave this problem to Nakkul and he solved it. He said the rooms 1, 4, 9, 16, 25 etc will remain open because they all have odd number of factors. Please let us know if this is the right answer.

  Thanks
  Ravi

  பதிலளிநீக்கு
 2. சரியான விடை நகுல்.கதவு எண்களின் காரணிகளின் எண்ணிக்கை தான் கதவு திறந்திருப்பதை முடிவு செய்கிறது.வர்க்க எண்களுக்கு காரணிகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்கும். அதனால் 1,4,9,25,36,49,64,81,100 எண்கள் கொண்ட கதவுகள் திறந்திருக்கும்.எனவே 90௦ பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு