வெள்ளி, 18 ஜனவரி, 2013

மிரிஸ்லோவ் ஹோலுப் (Miroslav Holub)

மிரிஸ்லோவ் ஹோலுப் செகொச்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு கவிஞர் மற்றும் அறிவியலாளர். இவர் வாழ்ந்த காலத்தில் ஒரு பக்கம் ஜெர்மன் நாசிகளாலும் பின்பு கம்யூனிஸ்ட்களும் இவர் நாடு கடந்து சென்ற துன்பத்தை அனுபவித்தவர். கவிதைகளில் அறிவியலை பயன்படுத்தி எழுதுவது இவர் சிறப்பு. இதுவரை கவிதைகள் பக்கமே வராதவர்களுக்கு தாம் கவிதை எழுதுவதாக இவர் கூறினாலும், இவர் கவிதைகள் ஆழ்ந்த பொருள் கொண்டதாகவும், அறிவார்ந்த தளத்தில் அமைந்தவைகளாகவும் உள்ளன. போரின் துயரத்தை “விமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு” என்ற கவிதையில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இவருடைய “The Cat” மற்றும் “The Door” என்ற இரண்டு கவிதைகளின் மொழி பெயர்ப்பை இங்கு கொடுத்துள்ளேன். இவைகளை பலமுறை படித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும் சமயமும் வெவ்வேறு திசையில் சிந்தனை செல்லும். “அந்த பூனை” கவிதை மனதில் ஒருவித இருளை விட்டுச் செல்லும். அதே சமயம் “அந்த கதவு” கவிதை நம்பிக்கையை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம். கவிதைகள் உங்கள் கற்பனைக்கே.
அந்த பூனைவெளியே அது இரவாக இருந்தது

எழுத்துக்கள் இல்லாத ஒரு புத்தகத்தைப் போல்.

மேலும் அந்த சாசுவதமான இருள்

வடிகட்டப்பட்ட நகரின் ஊடாக நட்சத்திரங்களில் கசிகிறது.நான் அவளிடம் கூறினேன்

செல்லாதே என

நீ மாட்டிக் கொள்ள மட்டும் செய்வாய்

மேலும் மயக்கப்படுத்தப் படுவாய்

மேலும் வெறுமையில் துன்புருவாய்.நான் அவளிடம் கூறினேன்

செல்லாதே என

ஏன் தேவையில்லையா

ஒன்றுமே?ஆனால் ஒரு ஜன்னல் திறக்கப்பட்டது

அவள் வெளியேறினாள்,

ஒரு கருப்புப் பூனை அந்த காரிருள் இரவுக்குள்,

அவள் கரைந்தாள்,


ஒரு கருப்புப் பூனை அந்த காரிருள் இரவுக்குள்,

அவள் இப்போதுதான் கரைந்தாள்

மேலும் யாருமே எப்போதுமே அவளை மீண்டும் பார்க்கவில்லை.

அவள் அவளேயே கூட.


ஆனால் நீ அவளை கேட்க முடியும்

சில சமயங்களில்,

அது அமைதியாகவும்

மேலும் வடக்கிலிருந்து வீசும் ஒரு காற்று இருக்கும் போது

மேலும் நீ கூர்மையாக கேட்கையில்

உனக்கு உன்னுள்ளே.xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx•அந்த கதவுபோ அந்தக் கதவைத் திற.

ஒரு வேளை வெளியில்

ஒரு மரம் , இல்லை ஒரு மரத்துண்டு,

இல்லை ஒரு தோட்டம்

இல்லை ஒரு மந்திர நகரம் இருக்கலாம்.போ அந்தக் கதவைத் திற.

ஒரு வேளை வெளியில்

சொரிந்து கொண்டிருக்கும் நாய் இருக்கலாம்.

ஒரு வேளை வெளியில் ஒரு முகம்,

இல்லை ஒரு விழி

இல்லை ஒரு சித்திரத்தின்

சித்திரம் இருக்கலாம்.போ அந்தக் கதவைத் திற.

பனி மூட்டம் வெளியில் இருந்தாலும்

அது போய் விடும்.போ அந்தக் கதவைத் திற.

வெளியில் இருளின் கானம் இருக்கக் கூடும்,

மேலும் வெளியில் ஆழமான காற்றின் மூச்சிருக்கலாம்

இல்லை ஒன்றுமே இல்லாமல் கூட போகலாம்

போ அந்தக் கதவைத் திற.குறைந்த பட்சம்

காற்றோட்டமாவது இருக்கக் கூடும்.


மலைகள்.காம் 18 இணையத்தில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக