திங்கள், 21 செப்டம்பர், 2009

பிங்கின் புதிய "மறைமுக" (virtual) தேடும் வசதி

தேடு பொறியில் கூகுளின் ஆதிக்கத்தைக் குறைத்து. அதிக வருமானம் பெறுவதற்கு மைச்ரோசபிட் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகிறது. அதில் யாகூவுடன் செய்து கொண்ட உடன்பாடு மிகவும் முக்கியம்.மேலும் தரவுகளை வரிசைப் படுத்தி கொடுக்க உதவியாக "உள்பிராம் ஆல்பா" (Wolfram Alpha) தேடுபொறியின் உதவியையும் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை மைச்ரோசபிட் செய்து கொண்டது. அதற்கு அடுத்ததாக புதிய "மறைமுகத் தேடல்" வசதியை பிங் தேடுபொறியில் மைச்ரோசபிட் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய தேடல் எப்படி செயல் படுகிறது என்று பார்ப்போம்.

பிங்கின் மறைமுக வலைத்தளத்திற்குச் சென்றால், முகப்பில் படங்கள் இருக்கிறது.அதாவது படத்தை வைத்து தேடும் முறை. ஒரு சமீபத்திய புத்தகத்தின் மதிப்புரைப் படிக்கிறீர்கள். ஆனால் புத்தகத்தின் பெயர் மறந்து விட்டீர்கள்.இப்போது பிங்கின் "மறைமுக" தேடலை பயன் படுத்தி பொருட்கள் வாங்குதல் (shopping) என்ற இடது பக்கத்தில் உள்ள காட்சிவகைப்பட்டி (display menu) உபயோகித்து "புத்தகங்கள்" என்ற படத்தை கொண்டு புத்தகங்களின் பட்டியலைப் பெறலாம். கீழே உள்ள படத்தில் பட்டியலைப் பாருங்கள்.



மேலும் இந்த தேடலின் மூலமாக சினிமாவாகப் படமாக்கப் பட்ட புத்தகங்களையும் கண்டறியலாம். படத்தில் காணலாம்.



அதே போல் "உலகத் தலைவர்கள்"(world leaders) என்ற காட்சிவகைப்பட்டி அழுத்தினால் கீழே உள்ளது போல உலகத் தலைவர்களின் படங்கள் காட்டப்படுகின்றன.



மேலும் அதிலிருந்து மன்மோகன் சிங் படத்தை அழுத்தினால், அவரைப் பற்றிய வலைத் தளங்கள் பட்டியலிடப் படுகின்றன. அதிலும் இடது பக்கத்தில் மற்ற இந்தியத் தலைவர்களின் பெயர்கள் தேடுவதற்கு வசதியாக வரிசைப் படுத்தப் படுகின்றன. இது ஒரு மிக நல்ல முயற்சியாகவும், இந்தத் தேடுதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

நீங்களும் இங்கே முயற்சி செய்து பாருங்களேன்.

4 கருத்துகள்: