செவ்வாய், 15 செப்டம்பர், 2009
கூகிள் "squared" உபயோகங்கள்
கூகிள் எத்தனையோ புதிய முயற்சிகளை செய்து வருகிறது. அதில் சமீபத்திய ஒன்று தான் "கூகிள் சதுரம்" என்ற இந்த தேடும் தளம்.இன்று வலைத்தளங்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை என்று ஆகிவிட்டது. இணையத்தில் கிடைக்காத விஷயங்களே இல்லை. இணையத்தில் உள்ள தரவுகளை அழகாக திரட்டி நெடுவரிசை மற்றும் வரிசையில் ஒருங்கிணைத்து ஓர் எக்ஸ்செல் வடிவில் கக்குகிறது இந்த தளம். நான் "cancer" என்று கொடுத்து "சதுரம்" ஆக்கச் சொன்னதில் கிடைத்த முடிவு கீழே:
இந்த எக்ஸ்செல் வடிவில் வரும் தரவுகளை நீங்கள் சேமித்து வைத்து பின்பு பயன்படுத்தவும் முடியும். மேலும் உங்களுக்கு வேண்டிய தரவுகள் இல்லை என்றால் அதனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். தரவுகள் அதிகமாக அதிகமாக இதைப் போன்று தரவுகள் திரட்டும் தன்மை அதிகரிக்கும். தமிழ் தேடுபொறிகள் இதனை செயல்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தான் நினைக்கிறேன்.
Labels:
தொழில்நுட்பம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக