ஞாயிறு, 8 ஜூலை, 2012

வீட்டிலிருந்து வெளியேறும் தமிழே ஆபத்தானது - எழுத்தாளர் எஸ்ராவுடன் ஒரு சந்திப்பு

இயல் விருது பெற்றுக் கொண்டு எழுத்தாளர் எஸ்ரா டேட்டிராய்ட் வரவிருப்பதாக நண்பர் திருமூர்த்தி கூறினார். எழுத்தாளர் ஜெயமோகன் வந்த போது அவரை சந்தித்த நண்பர்கள் அனைவருக்கும் திருவும், அனந்தும் மின்னஞ்சல் அனுப்பினார்கள். நூலகம் போன்ற பொதுவான ஓர் இடத்தில் எஸ்ரா உடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். அந்த யோசனை நாம் எல்லோரும் அறிந்த காரணங்களுக்காக நடைமுறை படுத்த இயலவில்லை. இறுதியாக வியாழன் ஜூன் 28 ஆம் தேதி என் வீட்டின் அடித்தளத்தில் சந்திப்பதாக முடிவாகியது.


27 ஆம் தேதி திரு எஸ்ராவுடன் கனடாவிலிருந்து  காரில் பயணித்து வரும் போது அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். 28 ஆம் தேதி மதியம் திரு எஸ்ராவுடன் என் வீட்டிற்கு வந்து ஆனந்த் ஆர்டர் செய்த சப்பாத்தி கொடுத்து விட்டு செல்வதாகக் கூறினார். மற்ற படி இரவு கூட்டத்திற்கு தேவையான உணவு வகைகள் என் மனைவி லலிதாவின் உபயம்.. நான் அன்று வீட்டிலிருந்து என் அலுவலகப் பணியை செய்தேன்.. அதனால் திரு வரும் போது வீட்டில் இருப்பேன் எனத் தெரிவித்தேன். மாடியில் நான் ஏதோ வேலையில் மீழ்கி இருந்த போது, திருவும், எஸ்ராவும் வீட்டினுள் வந்திருக்கிறார்கள். என் மகன் வந்து என்னிடம் "The writer dude is here" எனக் கூறினான். அவனிடம் அப்படி "dude" என்றெல்லாம் கூறக் கூடாது எனக் கடிந்து கொண்டேன். அவனுக்குப் புரியவில்லை. மேலும் எழுத்தாளர் என்றால் வைரமுத்து போல் பெரிய ஜிப்பா போட்டுக் கொண்டு, கருணாநிதி குரலில் புரியாத தமிழில் பேசுவார் என்று மனச் சித்திரம் கொண்டிருந்ததாகவும், ஆனால் எஸ்ரா மிகவும் சிம்பிளாக இருப்பதாகக் கூறினான் என் மகன்.அதை நானும், என் வீட்டினரும் முழுவதும் ஒத்துக் கொண்டோம் . சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மாலை வருவதாகக் கூறிச் சென்றனர்.

மாலை சரியாக 6:30 மணிக்கு நண்பர் பாலநேத்ரம் வந்தார். இவர் மனைவி விஜியுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் "தமிழ் அமுதம்" என்ற வானொலி நிகழ்ச்சி நடத்தி வந்தார்.. பின் கல்பனா (இவர் அமெரிக்காவில் பல இடங்களில் கவியரங்களில் கலந்து கொண்டு கவி பாடுபவர் ) மற்றும் அவர் கணவர் ஹரிஹரன் வந்தார்கள்.இவர்கள் மூன்று பேரும் நண்பர் ராஜாராமன் நடத்தும் "தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்" என்ற அமைப்பில் வெளிவந்த எஸ்ரா வருகையின் அறிவிப்பின் மூலம் கூட்டத்திற்கு வந்தார்கள். பகவதிபெருமாள் (இவர் சுருக்கமாக பில் என அறியப் படுகிறார் ) தொலை பேசியில் அழைத்து சிறிது நேரத்தில் என் வீட்டில் இருப்பதாகக் கூறினார். டேட்டிராய்ட் தமிழ் சங்கம் நடத்தும் கதம்பம் பத்திரிக்கையின் எடிட்டர் சரவணன் வந்தார். அவரைத் தொடர்ந்து அனந்த் இரண்டு நண்பர்களுடன் வந்து சேர்ந்தார். பில் வந்த கையோடு திருவும், எஸ்ராவும் உள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் நண்பர் அருள் வந்து இணைந்து கொண்டார். என் மனைவி, மாமனார் மற்றும் மாமியார். கூட்டம் களை கட்டியது.



எஸ்ராவுடன் கழித்த மூன்று நாட்கள் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும்  இல்லை.. மேலும் பல விஷயங்கள் நான் அறிந்து கொண்டேன். அவர் எழுத்தின் விமர்சனங்களைக் கூட மிகவும் மென்மையாகவும், கோபப்படாமலும் கையாண்டார். தனக்குத் தான் எல்லாம் தெரியும், எதிரில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிற எண்ணமில்லை.  நாம் பேசுவதையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.. அவருடன் உரையாடியதில் எனக்கு நினைவில் இருப்பதை பகிர முயல்கிறேன்.

எஸ்ரா எழுதிய "காலம்" பற்றிய கட்டுரையுடன் உரையாடல் தொடங்கியது. காலம் என்பது நினைவுகளின் தொகுப்பு தான். நம் வசதிக்காகத் தான் நாள்,, கிழமை எனப் பிரித்துக் கொண்டுள்ளோம். அதனால் தான் தமிழில் இறந்தவர்களை காலத்தோடு இணைத்து காலமானார்கள் எனக் கூறுகிறோம் என்றார் எஸ்ரா.



உரையாடல் தொடரும்.... ......



11 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுதுங்கள் ஸார். பதிவுகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாஸ்கர். நிச்சியம் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  3. வீட்டிலிருந்து தமிழ் வெளியே தள்ள படுவது ஆபத்தானது!
    தலைப்பை சரியாக சொல்லுங்கள் தமிழ் ஆபத்தானது என்பது போல உள்ளது நாம் வெளியே தள்ளும் செயல் தான் ஆபத்தானது.

    மனம் மிக வலிக்கிறது.
    தளங்களில் இப்படி பொருள் மயக்கத்துடன் எழுதுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் தானாக வெளியேறாது. வெளியேற்றப்படும் தமிழ் தான் இங்கு பேசு பொருள். புரிதலில் தான் வேற்றுமை.
      எனினும், தங்களின் மாற்றுக் கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. அடுத்த பகுதிக்கு ஆவலாகக் காத்திருக்கின்றேன்.

    எஸ்.ரா. ஒரு இனிய மனிதர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்.ரா. ஒர் இனிய மனிதர் என்பதில் சந்தேகமில்லை துளசி.

      நீக்கு
  5. தமிழில் இறந்தவர்களை காலத்தோடு இணைத்து காலமானார்கள் எனக் கூறுகிறோம் என்றார் எஸ்ரா.
    அருமையான விளக்கத்துடன் இருந்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சசி கலா. முடிந்தால் எஸ்ராவை சந்தித்துப் பேசிப் பார்க்கவும். நல்ல அனுபவமாக அமையும்.

      நீக்கு
  6. பாஸ்கர் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி. மிக சந்தோஷமானதொரு மாலைப்பொழுது, ஏற்படுத்திக்கொடுத்த திருவுக்கும், கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    எஸ்ரா - மிக இயல்பாக, நட்பு கலந்து பேசுபவராகவும், விரைவில் ( ஒருவருக்கொருவர் அவ்வளவாக) பரிச்சயமற்ற வாசகர் மத்தியில் ஒரு இணைப்புப் பாலமாகவும்
    வெளிப்படையாக ஒரு எழுத்தாளராக வாழ்வு பற்றிய தனது கருத்துக்களை யாதொரு தயக்கமுமின்றி முன் வைப்பவராகவும் இருந்தார்.

    வாசகர்களின் கேள்விகளையும், அவர் மற்றும் படைப்பு பற்றிய விமர்சனங்களையும் மிகத் தைரியமாகவே எதிர்கொண்டார்.

    மேலும் எழுதுங்கள் பாஸ்கர் ....... ஆர்வமுடன் இருக்கிறேன், ஆங்காங்கு நானும் (சைக்கிள் gap -ல) கலந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. எஸ்.ராமகிருஷ்ணனுடன் உரையாடும் வாய்ப்பு அலாதியானது. அவர் பேசப்பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மதுரை புத்தகத்திருவிழாவில் பார்த்து அவருடன் உரையாடிய ஞாபகம் வந்தது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மூன்றாவது பாகம் படிப்பதற்கு முன் இந்த முதல் பாகம் படிக்க வந்தேன்... நன்றி சார்.

    பதிலளிநீக்கு