சனி, 6 பிப்ரவரி, 2010

1089 என்ற எண்ணின் மர்மம்


எந்தவொரு மூன்று இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளவும்.
அந்த மூன்று இலக்க எண்ணின் முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் 2 அல்லது அதை விட பெரியதாக இருக்க வேண்டும்.உதாரணமாக 133 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். அந்த எண்ணை 331 என்று திருப்பி எழுதவும்.

331 - 133 = 198


இப்போது

198+891=1089

எந்த மூன்று இலக்க எண் முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் 2 அல்லது அதை விட பெரியதாக இருக்குமாறு எடுத்துக் கொண்டு, மேலே குறிப்பிட்ட முறையை செயல் படுத்தினால் எப்போதும் 1089 என்ற எண் கிடைப்பதைக் கண்டறியலாம்.
"1089 and All That" என்ற புத்தகத்தில் டேவிட் அசிசொன் என்பவர் இதைப் போல் பல சுவையான தகவல்களை கொடுத்திருக்கிறார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் சிறிது நாட்கள் பதிவு எழுத முடியவில்லை. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்

11 கருத்துகள்:

  1. நல்ல மூளைக்கு வேலை தரும் இடுகை.
    நான் சிறுவயதில் படித்தது.
    எதாவது ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்து கொள்ளுங்கள். ( 1924 )
    முதலில் இறங்கு வரிசையில் எழுதுங்கள். (9421 )
    பின் ஏறு வரிசையில் எழுதுங்கள் (1249 )
    பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை கழியுங்கள். (9421 -1249 = 8172 )
    வந்த விடையை மீண்டும் அதேபோல செய்யுங்கள். (8721 -1278 = 7443 )
    மறுபடி, மறுபடிஅதேபோல செய்யுங்கள்
    என்ன ஆச்சு.?
    சில பல தடவைகளுக்கு பின் உங்களுக்கு வந்த விடை (6174 )

    இந்த எண்ணை எத்தனை முறை மேற்சொன்ன முறைப்படி
    முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப இதே என் வந்து நிற்கும்.
    எந்த நான்கு இலக்க என்னில் வேண்டுமானாலும் முயற்சி
    செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி பெயரில்லா, அண்ணாமலையான்,

    பதிலளிநீக்கு
  3. நன்றி சுரேஷ் தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு.

    பதிலளிநீக்கு
  4. சரவணா,
    மிக்க நன்றி. தங்கள் பெயரில்லா கேள்வியின் பதிலுக்கு. மேலும் பின்தொடர்ந்து ஊக்குவித்தலுக்கும்.

    பதிலளிநீக்கு
  5. கைலாஷ்,
    நன்றி. 6174 என்ற எண்ணைப் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.
    இதைப் பற்றிய என்னுடைய பதிவை இங்கே பார்க்கவும்.
    http://tlbhaskar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  6. http://tlbhaskar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு