ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டம்

வருடத்தில் நான்கு முறை வரும் இந்த grand  slam  இறுதி ஆட்டங்களைப் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி தான். இன்று நடந்த ஜோகோவிச் - நடால் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார்.



ஒரு பக்கம் என் மகன் ஜோகோவிச் வெற்றி பெற வேண்டும் என்கிறான். மறுபுறம் என் இல்லாள் நடால் பாவம் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்சி. எனக்கு இருவரும் மிகவும் பிடித்தவர்கள் என்றாலும், நடாலை ஆதரித்தால் என் மகன் நீங்கள் எப்பவும் அம்மா சொல்வதிற்கு சரி என்று தான் கூறுவீர்கள் (உண்மை கசக்குமாமே?) என்று காலை வருவான். ஞாயிறு காலை ஆறு மணிக்கு இல்லாளை பகைத்துக் கொள்வது முட்டாள்தனம்.  அதை ஒரு மாதிரி சமாளித்து அந்த சுவையான ஆட்டத்தைப் பார்த்தாகி விட்டது. நீங்கள் டென்னிஸ் பிரியராக இருந்து பார்க்கவில்லை எனில், மிகப் பெரிய இழப்பு தான்.

முதல் செட்டில் நடால் தூள் கிளப்பி விட்டார். சரி மூன்று செட்டில் முடிந்து விடும் என்று பார்த்தால், இரண்டாவது செட்டிலிருந்து ஜோகோவிச் நடாலுக்கு தண்ணி காட்டி விட்டார். நான்காவது செட்டின் இறுதியில் நடால் சுதாரித்துக் கொண்டார். இறுதி சுற்றில் இளமை வென்றது. குறிப்பாக தூண்டப் படாத பிழைகளால் (unforced errors) நடாலின் வெற்றி வாய்ப்பு கை நழுவியது.



ஜோகோவிச் மிக அருமையாக விளையாடி கோப்பை வென்றார். நல்ல அனுபவம். சரி பிரெஞ்சு ஒபெனுக்காக காத்திருப்போம்.